14/09/2024
Business

Yamaha NMax 155cc :யமஹா என்மேக்ஸ் 155, கிராண்ட் ஃபிலானோ இந்தியா வருகையா..!

Yamaha NMax 155cc :யமஹா என்மேக்ஸ் 155, கிராண்ட் ஃபிலானோ இந்தியா வருகையா..!


2024 பாரத் மொபைலிட்டி குளோபல் எக்ஸ்போவில் வெளியான யமஹா NMAX155 மற்றும் கிராண்ட் ஃபிலானோ (Grand Filano) ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்படுவதறகான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

ஏற்கனவே சந்தையில் உள்ள யமஹா ஏரோக்ஸ் 155cc ஸ்கூட்டரின் அடிப்படையில் உள்ள என்மேக்ஸ் 155 ஆனது என்ஜின் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை பகிர்ந்து கொள்ளுகின்றது.

Yamaha Nmax 155

ஏரோக்ஸ் 155 மாடலை விட மிக மாறுபட்ட மேக்ஸி ஸ்கூட்டர் ஸ்டைலை பெற்றதாக அமைந்துள்ள யமஹா Nmax 155 ஸ்கூட்டரில் முழுமையாக எல்இடி ஹெட்லைட், எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் கருப்பு நிறத்தை பெற்ற பேனல்களுடன் ஸ்டைலிஷாக அமைந்துள்ளது.

155cc DOHC ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு VVA என்ஜின் ஆனது 14.8 bhp பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.  V- பெல்ட் பெற்ற CVT கியர்பாக்ஸ் பயன்படுத்துகிறது. இதே என்ஜின் R15 V4, MT-15 மாடல்களில் உள்ளது. ஏரோக்ஸ் 155 மாடல் ரூ.1.47 லட்சத்தில் கிடைப்பதனால் கூடுதலாக என்மேக்ஸ் 155 மாடலும் வரவுள்ளது.

Yamaha Grand Filano

இந்திய சந்தையில் யமஹா ஃபேசினோ போன்ற வடிவமைப்பினை கொண்ட கிராண்ட் ஃபிலானோ 125cc மாடல் நியோ ரெட்ரோ ஸ்டைலை கொண்டதாக அமைந்துள்ளது.

125 cc ஹைபிரிட் ஏர் கூல்டு FI என்ஜின் பெற்றள்ள கிராண்ட் ஃபிலானோ ஆனது 8.2 PS பவரை 6,500 RPM-ல் மற்றும் 10.3 NM டார்க்  5,000 RPM-ல் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் கிராண்ட் ஃபிலோனோ மாடலும் விற்பனைக்கு ரூ.95,000 விலையில் அறிமுகம் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படலாம்.

மேலும் படிக்க – யமஹா ஆர்15எம் கார்பன் ஃபைபர் எடிசன் விபரம்

Yamaha Grand Filano







Show
comments






Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *