‘ரஜினி 170’-ல் அமிதாப் பச்சன்: 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி! | Amitabh Bachchan on board for rajinis Thalaivar 170

‘ரஜினி 170’-ல் அமிதாப் பச்சன்: 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி! | Amitabh Bachchan on board for rajinis Thalaivar 170

சென்னை: ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் […]

Read More
 ODI WC 2023 | மழையால் இந்தியா – நெதர்லாந்து பயிற்சி ஆட்டம் ரத்து

ODI WC 2023 | மழையால் இந்தியா – நெதர்லாந்து பயிற்சி ஆட்டம் ரத்து

திருவனந்தபுரம்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இந்தியா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. இந்நிலையில், இந்தியா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் இன்று கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இன்று காலை முதலே திருவனந்தபுரத்தில் மழை பெய்துவந்த நிலையில் ஆட்டம் தொடங்கவிருந்த […]

Read More
 எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு | Nobel Prize 2023 in Physics awarded to Pierre Agostini, Ferenc Krausz, Anne L’Huillier

எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு | Nobel Prize 2023 in Physics awarded to Pierre Agostini, Ferenc Krausz, Anne L’Huillier

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): 2023-ம் ஆண்டு இயற்பியலுகான நோபல் பரிசுக்கு விஞ்ஞானிகளான பியரி அகோஸ்தினி, ஃபெரெங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக ‘தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ்’ இன்று (அக்.3) தெரிவித்தது. இயற்பியலுக்காக நோபல் பரிசு பெறும் அமெரிக்காவைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஜெர்மனியைச் சேர்ந்த ஃபெரெங்க் க்ரவுஸ், ஸ்வீடனைச் சேர்ந்த அன்னி […]

Read More
 100 நாள் வேலைத் திட்டம் | “தமிழகத்தில் 9 வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை” – ஜோதிமணி எம்.பி காட்டம் | Jyotimani Talks on Mahatma Gandhi NREGS

100 நாள் வேலைத் திட்டம் | “தமிழகத்தில் 9 வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை” – ஜோதிமணி எம்.பி காட்டம் | Jyotimani Talks on Mahatma Gandhi NREGS

கரூர்: காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான போக்கை பாஜக கைவிடவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. செ.ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். கரூர் எம்.பி. அலுவலகத்தில் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் இன்று கூறியது: ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, 2 மாதத்துக்கு மேலாக ஊதியம் வழங்கவில்லை. இதனால், கடுமையான பொருளாதார நெருடிக்கடியில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். நாடு முழுவதும் இத்திட்டத்தில் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். இதில் 91 லட்சம் பேர் தொடர்ச்சியாக […]

Read More
 திருப்பதியில் திருடப்பட்ட 2 வயது சிறுவன் மீட்பு: சென்னை தம்பதியிடம் ஒப்படைத்தது போலீஸ் | Tiirupathi: Kidnapped child nabbed; parents extend thanks to police and media

திருப்பதியில் திருடப்பட்ட 2 வயது சிறுவன் மீட்பு: சென்னை தம்பதியிடம் ஒப்படைத்தது போலீஸ் | Tiirupathi: Kidnapped child nabbed; parents extend thanks to police and media

திருப்பதி: திருப்பதியில் திருடப்பட்ட சென்னை சிறுவன் சில மணி நேரங்களிலேயே பத்திரமாக மீட்கப்பட்டார். இது சிறுவனின் பெற்றோருக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், காவல் துறைக்கும், ஊடகங்களுக்கும் பெற்றோர் நன்றியைத் தெரிவித்தனர். சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சந்திரசேகர் – மீனா தம்பதிக்கு 8 வயதில் மோகன் வசந்த், 2 வயதில் அருள் முருகன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சந்திரசேகர் மனைவி மீனா மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் […]

Read More
 தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமம் உல்லாடா: விருது வழங்கி மத்திய அரசு கவுரவிப்பு | Ullada is a nationally best tourist village

தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமம் உல்லாடா: விருது வழங்கி மத்திய அரசு கவுரவிப்பு | Ullada is a nationally best tourist village

உதகை: தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வாக, நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட 795 விண்ணப்பங்களில், நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் உள்ள பசுமையான உல்லாடா கிராமம், மத்திய சுற்றுலா துறையால் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிராண்ட் கேன்யனுக்கு பிறகு, இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கான கேத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது உல்லாடா கிராமம். உலக பிரசித்தி பெற்ற கேத்தி ரயில் நிலையம், நீர்வீழ்ச்சி, பாறைகள் மற்றும் விவசாய நிலங்களை கொண்டுள்ளது இந்த அழகிய […]

Read More
 “நான் இருண்ட கதாபாத்திரங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர்” – நவாசுதீன் சித்திக் | audience wants to do more dark, intense roles says Nawazuddin Siddiqui

“நான் இருண்ட கதாபாத்திரங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர்” – நவாசுதீன் சித்திக் | audience wants to do more dark, intense roles says Nawazuddin Siddiqui

மும்பை: ரொமான்டிக் காமெடி கதாபாத்திரங்களை விட இருண்ட, கதாபாத்திரங்களில் தான் நடிப்பதையே பார்வையாளர்கள் விரும்புவதாக நடிகர் நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். ’கேங்ஸ் ஆஃப் வஸேப்பூர்’, ‘மன்ட்டோ’, ‘போட்டோகிராஃப்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தார். சமீபத்தில் வெளியான ‘ஹட்டி’ என்ற படத்தில் திருநங்கையாக நடித்து பாராட்டை பெற்றார். அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள […]

Read More
 Asian Games 2023 | பந்துவீச்சிலும் ஜொலித்த இந்தியா – நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி | India won by 23 runs against Nepal in Asian Games Mens T20I

Asian Games 2023 | பந்துவீச்சிலும் ஜொலித்த இந்தியா – நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி | India won by 23 runs against Nepal in Asian Games Mens T20I

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. நேபாள அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 203 ரன்கள் இலக்கை துரத்திய நேபாள அணியில் குஷல் புர்டெல் 28 ரன்களும், குஷல் மல்லா 29 ரன்களும், திபேந்திர சிங் 32 ரன்களும், சந்தீப் ஜோரா 29 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக ஆடவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி […]

Read More
 நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு; டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு | Two quakes jolt Nepal, tremors felt in Delhi

நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு; டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு | Two quakes jolt Nepal, tremors felt in Delhi

காத்மாண்டு: நேபாளத்தில் இன்று அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் அதிர்வுகள் டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 2.25 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 4.9 ஆக பதிவாகி உள்ளது. இரண்டாவது நிலநடுக்கம் நண்பகல் 2.51 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தின் திபாயல் நகருக்கு வடகிழக்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நில […]

Read More