“பிரதமர் மோடி எப்படி தினமும் லட்ச ரூபாய் மதிப்புள்ள உடைகளை அணிகிறார்?” – ராகுல் காந்தி | PM’s salary is 2.5 lakh. How he wears suits worth lakh rupees everyday?: Rahul Gandhi

“பிரதமர் மோடி எப்படி தினமும் லட்ச ரூபாய் மதிப்புள்ள உடைகளை அணிகிறார்?” – ராகுல் காந்தி | PM’s salary is 2.5 lakh. How he wears suits worth lakh rupees everyday?: Rahul Gandhi

ரேபரேலி: ரூ.2.5 லட்சம் சம்பளம் வாங்கும் பிரதமர் மோடி, எப்படி தினமும் லட்ச ரூபாய் மதிப்புள்ள உடைகளை அணிகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று (மே.13) அத்தொகுதியில் தனது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவுடன் சேர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “ரேபரேலி உடனான எங்கள் குடும்ப உறவு பல ஆண்டுகளுக்கு முந்தையது. எங்கள் தாத்தா ஜவஹர்லால் […]

Read More
 பாட்னா: சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி | PM Modi makes roti performs seva at Patna Sahib gurdwara

பாட்னா: சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி | PM Modi makes roti performs seva at Patna Sahib gurdwara

பாட்னா: மக்களவை தேர்தல் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) பிஹாரில் சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1 […]

Read More
 முதல்வர் பதவியில் இருந்து கேஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி | Supreme Court rejects plea seeking removal of Arvind Kejriwal as Delhi chief minister

முதல்வர் பதவியில் இருந்து கேஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி | Supreme Court rejects plea seeking removal of Arvind Kejriwal as Delhi chief minister

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) நிராகரித்தது. “கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நேர்மையானது. எனினும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சட்டப்பூர்வ […]

Read More
 ஆந்திராவில் ஆட்சி அமைப்பது யார்? – மாநிலம் முழுவதும் கோடி கணக்கில் பந்தயம் | Who will form the government in Andhra Pradesh

ஆந்திராவில் ஆட்சி அமைப்பது யார்? – மாநிலம் முழுவதும் கோடி கணக்கில் பந்தயம் | Who will form the government in Andhra Pradesh

ஆந்திர மாநிலத்தில் இன்று 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்கள் என மாநிலம் முழுவதும் கோடிக் கணக்கில் பணம் வைத்து பந்தையங்கள் நடைபெற்று வருகின்றன. ஆந்திர மாநிலத்தில் அடுத்ததாக யார் ஆட்சி அமைப்பார்கள்? எத்தனை தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் வெற்றி பெறும்? வெற்றி பெறும் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்? என்றெல்லாம் ஆந்திர மாநிலத்தில் கோடிக் கணக்கில் பணம் வைத்து பந்தையங்கள் […]

Read More
 மக்களவை தேர்தலில் சூடுபிடிக்கும் ராமர் கோயில் விவகாரம்! | issue of Ram temple will heat up in the Lok Sabha elections

மக்களவை தேர்தலில் சூடுபிடிக்கும் ராமர் கோயில் விவகாரம்! | issue of Ram temple will heat up in the Lok Sabha elections

இதற்கு முன்பு நடந்த தேர்தலின்போது அயோத்தியின் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற உறுதிமொழியை பாஜக அளித்து வந்தது. தற்போது அங்கு கோயில் கட்டப்பட்ட நிலையில் அதன் பலனை பாஜக மக்களவை தேர்தலில் பெற முயலும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த முறை 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் 3 கட்டங்கள் முடிந்தும் கோயில் விவகாரம் இன்னும் பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. இனிவரும் 4 கட்ட தேர்தலில் ராமர் கோயில் மீதான விவாதம் பிரச்சாரங்களில் முக்கிய இடம்பெறத் […]

Read More
 காலை 9 மணி நிலவரம்: 96 தொகுதிகளில் 10.35% வாக்குப்பதிவு – மேற்குவங்கத்தில் அதிகம் | LS Elections 2024 4th phase: 10.35% voter turnout till 9 AM

காலை 9 மணி நிலவரம்: 96 தொகுதிகளில் 10.35% வாக்குப்பதிவு – மேற்குவங்கத்தில் அதிகம் | LS Elections 2024 4th phase: 10.35% voter turnout till 9 AM

புதுடெல்லி: நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 10.35 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 15.24 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 5.07 சதவீதம் பதிவாகியுள்ளது. இன்று ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக […]

Read More
 மேற்கு வங்க கவர்னர் மீதான பாலியல் புகாரில் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? – பிரதமருக்கு மம்தா பானர்ஜி கேள்வி | Why no action has been taken against West Bengal Governor Mamata question pm

மேற்கு வங்க கவர்னர் மீதான பாலியல் புகாரில் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? – பிரதமருக்கு மம்தா பானர்ஜி கேள்வி | Why no action has been taken against West Bengal Governor Mamata question pm

கொல்கத்தா: பாலியல் புகாருக்கு உள்ளான மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார். பாரக்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அம்டங்கா கிராமத்தில் தேர்தல் பேரணியின் போது மம்தா பேசியதாவது: சந்தேஷ்காலி விவகாரத்தில் பிரதமர் இன்னும் பொய்களை மட்டுமே பேசி வருகிறார். இந்த விவகாரத்தில் பாஜகவின் சதி இப்போது அம்பலமாகிவிட்டதால் அவர் வெட்கப்பட வேண்டும். 70-க்கும் மேற்பட்ட […]

Read More
 கடமையைச் செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்: 4 ஆம் கட்ட தேர்தல்; பிரதமர் அழைப்பு | Lok Sabha election 2024: PM Modi calls for democracy duty as voting begins in fourth phase

கடமையைச் செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்: 4 ஆம் கட்ட தேர்தல்; பிரதமர் அழைப்பு | Lok Sabha election 2024: PM Modi calls for democracy duty as voting begins in fourth phase

புதுடெல்லி: நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கடமையாற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர், “இன்று நடைபெறும் 4 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 96 […]

Read More
 சந்தேஷ்காலி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு ரூ.2,000 வழங்கியதாக புகார்: வீடியோ போலியானது என பாஜக கருத்து | Rs 2000 given to women protesting sandheshkali BJP says video is fake

சந்தேஷ்காலி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு ரூ.2,000 வழங்கியதாக புகார்: வீடியோ போலியானது என பாஜக கருத்து | Rs 2000 given to women protesting sandheshkali BJP says video is fake

கொல்கத்தா: சந்தேஷ்காலி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டதாக மண்டல தலைவர் போல் தோற்றமளிக்கும் நபர் கூறும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. மக்களவை தேர்தலை முன்னிட்டு, பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. இதே நிலை மேற்குவங்கத்திலும் காணப்படுகிறது. சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எல்லாம் நாடகம் என சந்தேஷ்காலி மண்டல தலைவர் கங்காதர் கயல் போல் தோற்றமளிக்கும் நபர் கூறும் வீடியோ கடந்த வாரம் வெளியானது. தற்போது அதே நபர், திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் […]

Read More
 வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 8 பேர் திரிபுராவில் கைது | 8 people who entered India illegally from Bangladesh arrested in Tripura

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 8 பேர் திரிபுராவில் கைது | 8 people who entered India illegally from Bangladesh arrested in Tripura

அகர்தலா: வங்கதேசத்தில் இருந்து திரிபுராவுக்குள் ஊடுருவிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். வங்கதேசத்தின் எல்லைப் பகுதிகளில் இந்தியாவின் திரிபுரா, மேகாலயா, மிசோரம், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன.அந்த வகையில் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட வங்கதேச மக்கள், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த சூழலில் […]

Read More