வருடாந்திர பராமரிப்பு பணி: கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் | Kudankulam Nuclear Power Plant power stopped at Tirunelveli

வருடாந்திர பராமரிப்பு பணி: கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் | Kudankulam Nuclear Power Plant power stopped at Tirunelveli

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த பராமரிப்பு பணிகள் 60 நாட்கள் வரை நடைபெறும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தி்ல் தலா 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் 70 சதவிகிதம் வரையில் நிறைவடைந்துள்ளன. […]

Read More
 “45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவரை நேர் வழியே” – அதிமுக பிளவு குறித்து செங்கோட்டையன் பதில் | “In 45 years of political history so far straight path” – Sengottaiyan’s response to AIADMK split

“45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவரை நேர் வழியே” – அதிமுக பிளவு குறித்து செங்கோட்டையன் பதில் | “In 45 years of political history so far straight path” – Sengottaiyan’s response to AIADMK split

காஞ்சிபுரம்: “எனது 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவரை நான் நேர் வழியில் சென்றுள்ளேன். இது மாற்றுக் கட்சியினருக்கும் தெரியும்.” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக பிளவுபடும். அதன்பின் அதிமுக செங்கோட்டையின் தலைமையில் அல்லது வேலுமணி தலைமையில் செல்லுமா என்பது தெரியவரும்” என்று தெரிவித்தார். அமைச்சர் ரகுபதியின் கருத்துக்கு பதில் அளித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் […]

Read More
 மத்திய அரசு உத்தரவால் புதுவையில் பதிவு பெற்ற மீன்பிடி விசைப் படகுகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம் | Intensification of surveying of fishing boats registered in Puducherry by order of Central Govt

மத்திய அரசு உத்தரவால் புதுவையில் பதிவு பெற்ற மீன்பிடி விசைப் படகுகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம் | Intensification of surveying of fishing boats registered in Puducherry by order of Central Govt

புதுச்சேரி: மத்திய அரசு உத்தரவால் புதுச்சேரியில் பதிவு பெற்ற மீன்பிடி விசைப் படகுகளை கணக்கெடுப்பும் பணி தொடங்கியது. இணையதள பக்கத்தைப் புதுப்பித்து விரைவில் இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு மீன்வளத் துறை அறிக்கையாக தரவுள்ளது. மத்திய அரசின் மீன்வள அமைச்சகம் அனைத்து கடலோர பகுதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தற்போது உள்ள மீன்பிடி தடை காலத்தில் அனைத்து பதிவு பெற்ற மீன்பிடி படகுகளையும் கள ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது புதுச்சேரி […]

Read More
 மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை:  மத்தள ஓடையில் திடீர் வெள்ளம் | Rain in Western Ghats:  Flash floods in Mathala Canal

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை:  மத்தள ஓடையில் திடீர் வெள்ளம் | Rain in Western Ghats:  Flash floods in Mathala Canal

உடுமலை: உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்று பெய்த கனமழையால் அங்குள்ள மத்தள ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். உடுமலையின் தெற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்துள்ளது. இம்மலை தொடரில் ஏராளமான சிற்றோடைகள் உள்ளன. மழைக்காலங்களில் சேகரமாகும் மழை நீர் தாழ்வான இடங்களை நோக்கி பாய்வது வழக்கம். திருமூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை, நல்லார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ள நீர் வடியும் வகையில் […]

Read More
 “ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் தேவையெனில் சபாநாயகரிடம் விசாரணை” – தென்மண்டல ஐ.ஜி. தகவல் | “Investigation to Speaker if necessary in Nellai Jayakumar death case” – South Zone I.G. Information

“ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் தேவையெனில் சபாநாயகரிடம் விசாரணை” – தென்மண்டல ஐ.ஜி. தகவல் | “Investigation to Speaker if necessary in Nellai Jayakumar death case” – South Zone I.G. Information

திருநெல்வேலி: “திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மர்மமாக உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தேவைப்பட்டால் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவுவிடம் விசாரணை நடத்தப்படும்” என்று தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமை வகித்தார். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையர் மூர்த்தி, மாவட்ட […]

Read More
 அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிய அனுமதியா? – தமிழக ஆளுநர் மறுப்பு | No information is known about the criminal case against Annamalai – Raj Bhavan

அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிய அனுமதியா? – தமிழக ஆளுநர் மறுப்பு | No information is known about the criminal case against Annamalai – Raj Bhavan

சென்னை: “அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழக ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை” என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக ஆளுநரால், தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழக ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக […]

Read More
 வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு | Today tamilnadu weather update

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு | Today tamilnadu weather update

சென்னை: தமிழகத்தில் இன்று (மே.,13) முதல் 5 நாட்களுக்கு கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனழமைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்துக்கான வானிலை தொகுப்பு: தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் […]

Read More
 சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி | Coimbatore Court allows Shavukku Shankar to be interrogated in police custody for one day

சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி | Coimbatore Court allows Shavukku Shankar to be interrogated in police custody for one day

கோவை: பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கடந்த 4-ம் தேதி சவுக்கு என்ற யு டியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய […]

Read More
 செல்லப் பிராணிகளுக்கு லைசென்ஸ்; 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம்: சென்னை மாநகராட்சி | 2,300 people apply for pet license in 3 days at Chennai Corporation

செல்லப் பிராணிகளுக்கு லைசென்ஸ்; 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம்: சென்னை மாநகராட்சி | 2,300 people apply for pet license in 3 days at Chennai Corporation

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவதற்கு கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலித்து உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், மண்டல வாரியாக அனுமதி பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கடந்த 3 நாட்களில் 2,300 பேர் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்காக அனுமதி கோரி சென்னை மாநகராட்சியில் […]

Read More
 “ராகுல் காந்தி உடன் நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடிக்கு அச்சம்” – செல்வப்பெருந்தகை | PM Modi Backs Out Afraid to Talk Face-to-Face with Rahul Gandhi – Selvaperunthagai

“ராகுல் காந்தி உடன் நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடிக்கு அச்சம்” – செல்வப்பெருந்தகை | PM Modi Backs Out Afraid to Talk Face-to-Face with Rahul Gandhi – Selvaperunthagai

சென்னை: “தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. இந்த பின்னணியில் தான் ராகுல் காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி அஞ்சி பின்வாங்குவதில் வியப்பொன்றும் இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி.லோகூர், […]

Read More