Business

Will New 2024 Dzire From Marut Suzuki Have Greater Feature Differences Over The Swift

Will New 2024 Dzire From Marut Suzuki Have Greater Feature Differences Over The Swift
Will New 2024 Dzire From Marut Suzuki Have Greater Feature Differences Over The Swift


Dzire 2024: மாருதி சுசுகியின் புதிய டிசைர் மாடலில் ஸ்விஃப்டை மிஞ்சும் வகையிலான, பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்விஃப்ட் & டிசைர் கார் மாடல்:

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஸ்விஃப்ட் கார் மாடல்  விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதைதொடர்ந்து,  சில மாதங்களில் விரைவில் புதிய டிசைர் மாடல் காரும் சந்தைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஸ்விஃப்ட் மற்றும் அதன் செடான் உடன்பிறப்பான டிசைர் ஆகிய இரண்டு கார்களும், அவ்வப்போது மிகப்பெரிய விற்பனையை எட்டுவதன் மூலம் இந்தியாவில் அதிக விற்பனையாகும் மாடல்களாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்நிலையில், ​​புதிய தலைமுறை ஸ்விஃப்ட் வெகுவிரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால், இரண்டு கார்களிலும் பிரீமியம் அம்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.

புதிய அம்சங்கள் என்ன?

புதிய ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்களின் பட்டியலைப் பகிர்ந்து கொள்கிறது. அதன்படி,  இதில் பெரிய ஃப்ளோட்டிங் வகையிலான டச்-ஸ்க்ரின், டாக்ல் அடிப்படையிலான கட்டுப்பாடுகள் மற்றும் புதிய சுவிட்ச் கியர் தளவமைப்பு ஆகியவை அடங்கும். ஃபிராங்க்ஸ் மற்றும் பலேனோ போன்ற புதிய மாருதி கார்களுடன் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இருக்கும். இரண்டு கார்களும் புதிய 1.2லி பெட்ரோல் இன்ஜினைப் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், புதிய டிசைர் ஸ்விஃப்ட்டிலிருந்து மேலும் தன்னைப் பிரித்துக் கொள்ள அதிக அம்சங்களைப் பெறலாம் என கூறப்படுகிறது.  சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்டு இணையத்தில் பரவியுள்ள புகைப்படங்கள் இதற்கு சாட்சியாக அமைந்துள்ளன.  அதன்படி, புதிய டிசைர் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதில் ஒரு தோராயமான திட்டம் கிடைத்துள்ளது.

புதிய டிசைரில் உள்ள கூடுதல் அம்சங்கள் என்ன?

புதிய டிசைர் 2024 மாடலில் புதிய ஸ்விப்டை காட்டிலும் கூடுதலான பிரீமியம் அம்சங்களை எதிர்பார்க்கலாம். அதோடு,  டிரிம் மற்றும் உட்புற தோற்றத்திலும் வித்தியாசத்தை உணரலாம். புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்டியர் கருப்பு நிறத்தில் இருக்கும் அதே நேரத்தில் டிசைர் ஒரு இலகுவான கருப்பு நிறத்தை பெறும். அம்சங்களைப் பொறுத்தவரை, டிசைர் 360 டிகிரி கேமராவைப் பெறும்.  இது ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் இடையே வித்தியாசமாக இருக்கலாம். அதே நேரத்தில் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்கும் வழங்கப்படலாம். வெளிநாட்டு மாடலில் காற்றோட்டமான இருக்கைகள் இருந்தாலும், புதிய டிசைர் அல்லது ஸ்விஃப்ட் இந்த அம்சங்களுடன் வருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இரண்டு கார்களிலும் AMT மற்றும் மேனுவல் பதிப்புகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.  அதே நேரத்தில் டிசைர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகியவை தற்போது சந்தையில் உள்ள கார்களில் இருந்து கூடுதலான அளவிற்கு வேறுபடுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை. 

Car loan Information:

Calculate Car Loan EMI



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *