முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் காணாமல் போன நிலையில் அவரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்
வெற்றி துரைசாமி குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்துள்ள நிலையில் இரவு பகலாக அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று காலை வெற்றி துரைசாமியின் செல்போன் கிடைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் சுற்றளவில் அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைச்சாமி ஒரு திரைப்பட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. ’என்றாவது ஒரு நாள்’ என்ற படத்தை அவர் இயக்கியுள்ள நிலையில், இந்த படத்தின் நாயகனான விதார்த், வெற்றி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
வெற்றி துரைசாமி கண்டிப்பாக திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, கண்டிப்பாக அவர் நலமுடன் திரும்பி வருவார் என்று கூறியுள்ளார். அவரது நம்பிக்கையின்படி வெற்றி துரைசாமி நலமுடன் திரும்பி வரவேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.