Business

Stock Market Sensex Nifty At Days Low Oil & Gas, Power Top Drag Check Details And Apply

Stock Market Sensex Nifty At Days Low Oil & Gas, Power Top Drag Check Details And Apply
Stock Market Sensex Nifty At Days Low Oil & Gas, Power Top Drag Check Details And Apply


Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.  மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 343.56  அல்லது 0.47 % புள்ளிகள் குறைந்து 71,266.79 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 102.40 அல்லது 0.47% சரிந்து  21,680.10 ஆக வர்த்தகமாகியது.

கடந்த வராம் இந்திய பங்குச்சந்தை ஏற்ற,இறக்கத்துடன் வர்த்தகமானது. இந்நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளாக பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. இது க்ரீனில் வர்த்தகமாகும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Stock Exchange (NSE) கடந்த ஆண்டை விட இந்தாண்டு நிகர லாபம் அதிகரித்துள்ளது. இது டிசம்பர் காலாண்டில் 1,975 கோடியாக , 8% பதிவு செய்துள்ளது. நேரடி வருமான வரி கலெக்சன் 20% அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. 10.02.2024-ன்படி நேரடி வருமான வரியின் மூலம் 18.38 லட்சம் கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. இது கடந்தாண்டைவிட 17.30% அதிகமாகும். 

 டாடா பவர் கம்பெபி 2024-ம் ஆண்டு நிதியாண்டில் ரூ.1,076 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2% அதிகரித்துள்ளது. 

லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..

விப்ரோ, அப்பல்லோ மருத்துவமனை, டிவிஸ் லெப்ஸ், ஹெச்.சி.எல்., டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, நெஸ்லே, எம் & எம், ஆக்சிஸ் வங்கி, க்ரேசியம், பாரதி ஏர்டெல், ஈச்சர் மோட்டர்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹிண்டால்கோ, ஹெச்.டி.எஃப்.சி., ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின. 

நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..

ஹீரோ மோட்டர்கார்ப், பி.பி.சி.எல்., கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி. என்.டி.பி.சி., இந்தஸ்லேண்ட் வங்கி, டாடா ஸ்டீஸ், பஜாஜ் ஃபினான்ஸ், கோடாக் மஹிந்திரா, எஸ்.பி.ஐ., ஐ.டி,.சி., அதானி போர்ட்ஸ்,பவர்கிரிட் கார்ப், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, அதானி எண்ட்ர்பிரைசிஸ், ஜெ.எஸ்.டபுள்யூ. ஏசியன் பெயிண்ட்ஸ்,சிலா, பஜாஜ் ஃபின்சர்வ், சன் ஃபார்மா, டாடா மோட்டர்ஸ், மாருதி சுசூகி, டைட்டன் கம்பெனி, டி.எசி.எஸ். ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.

பி.எஸ்.இ. ஸ்மால்கேப், மிட்கேப் 1.5% சரிவை சந்தித்துள்ளது. பங்குச்சந்தையில் 850 பங்குகள் ஏற்றத்துடனும் 2429 பங்குகள் சரிவுடனும் 85 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகி வருகிறது.

 



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *