Business

spicejet share price: SpiceJet share: அரசின் அறிவிப்பால் வீழ்ச்சி அடைந்த விமான நிறுவனங்களின் பங்கு விலை… 5% வரை சரிந்த பங்குகள்… – spicejet share down 5%

spicejet share price: SpiceJet share: அரசின் அறிவிப்பால் வீழ்ச்சி அடைந்த விமான நிறுவனங்களின் பங்கு விலை… 5% வரை சரிந்த பங்குகள்… – spicejet share down 5%
spicejet share price: SpiceJet share: அரசின் அறிவிப்பால் வீழ்ச்சி அடைந்த விமான நிறுவனங்களின் பங்கு விலை… 5% வரை சரிந்த பங்குகள்… – spicejet share down 5%


இன்டர்குளோப் ஏவியேஷன், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் உள்ள விமான போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்களின் பங்கு விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 2 முதல் 5 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளன.

airlines stock - et tamil

நாடாளுமன்ற குழு விமான கட்டணங்கள் ஒவ்வொரு ரூட்டிற்கு குறிப்பிட்ட வரம்புக்குள் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. மேலும் விமான டிக்கெட் விலையை கட்டுப்படுத்த தனி அமைப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு வியாழக்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில், விமானக் கட்டணங்களை நிர்ணயம் செய்வது தொடர்பான பரிந்துரைகள் மற்றும் அவதானிப்புகள் மீது அரசாங்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்பித்துள்ளது.

இதையடுத்து இன்டர்குளோப் ஏவியேஷன் பங்குகளின் விலை கிட்டத்தட்ட 5% சரிந்தது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்கும் 5.5% வரை சரிவைக் கண்டது.கோ ஏர் விமானங்கள் பண நெருக்கடிக்கு மத்தியில் தரையிறக்கப்பட்டதால், இண்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் ஸ்பைஸ் ஜெட் போன்ற செயல்பாட்டு விமான நிறுவனங்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. விமான நிறுவனங்களின் செயல்பாடுகள் மூன்றாவது காலாண்டில் சிறப்பாக அமையுமா என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால் விமான போக்குவரத்து நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்டர்குளோப் ஏவியேஷன் ஏற்கனவே 3வது காலாண்டில் செயல்பாடுகள் மூலம் வருவாயை 30.3% அதிகரித்து ரூ.19,452 கோடியாக அறிவித்துள்ளது. முந்தைய ஆண்டின் காலாண்டில் ரூ.5475 கோடியாக இருந்த வட்டி வரித் தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முந்தைய வருவாய் ரூ.3399 கோடியாக இருந்தது. அதாவது நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 61 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அந்நியச் செலாவணி இழப்பைத் தவிர்த்து, முந்தைய ஆண்டின் காலாண்டில் கிடைத்த லாபம் ரூ.2009 கோடியுடன் ஒப்பிடும்போது, 51.8% அதிகரித்து ரூ.3049 கோடியாக இருந்தது.விமான நிறுவனங்கள் விமானக் கட்டணங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தால், 2025ம் நிதியாண்டில் விமான சேவையின் தேவை 15 சதவிகிதம் வரை வளர்ச்சி அடையக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பெண்கள் வேலைக்கு சென்றால் தவறா? எது சிறந்த சேமிப்பு?



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *