Business

River Escooter – ரிவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் யமஹா மோட்டார் முதலீடு

River Escooter – ரிவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் யமஹா மோட்டார் முதலீடு
River Escooter – ரிவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் யமஹா மோட்டார் முதலீடு


பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட வோர்ல்டு ஆஃப் ரிவர் நிறுவனத்தின் யமஹா மோட்டார் நிறுவனம் ஒவர்சப்ஸ்கிரைப்டு சீரீஸ் B நிதியில் US$ 40 மில்லியன் (ரூ. 335 கோடி) முதலீட்டை அறிவித்துள்ளது.

ஏற்கனவே, இந்நிறுவனத்தில் அல்-ஃபுட்டெய்ம் ஆட்டோமோட்டிவ், லோயர்கார்பன் கேபிடல், டொயோட்டா வென்ச்சர்ஸ் மற்றும் மணிவ் மொபிலிட்டி ஆகிய நிறுவனங்களும் முதலீட்டை மேற்கொண்டுள்ளது.

River Indie Escooter

ரூ.1.38 லட்சத்தில் ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முரட்டுத் தன்மையை வெளிப்படுத்தும் தோற்றத்தை பெற்று 4 kwh லித்தியம் ஐயன் பேட்டரி பேக்கை மூலம் பவரை பெற்று இயங்கும் மின்சார மோட்டார் அதிகபட்சமாக 6.7Kw பவர் மற்றும் 26Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

Eco, Ride மற்றும் Rush மூன்று ரைடிங் முறைகளை பெற்ற இண்டி ஸ்கூட்டரின் ரேஞ்ச் 120 கிமீ வழங்கும் என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 800-watt சார்ஜரை கொண்டு சார்ஜிங் பெற 5 மணி நேரத்தில் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் செய்யலாம்.

3.9 விநாடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டுவதுடன் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் சேர்க்கப்பட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் ரிவர் எலக்ட்ரிக் அடைந்துள்ள முன்னேற்றம் நம்மை வெகுவாக கவர்ந்துள்ளது. நேரம், குறிப்பாக வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில்  கவனம் செலுத்துகிறது,” என ஹஜிம் ஜிம் அயோடா, தலைமை பொது மேலாளர், புதிய வணிக மேம்பாட்டு மையம், யமஹா மோட்டார் கோ தெரிவித்துள்ளார்.

இந்த முதலீடு 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு பில்லியன் டாலர் உலகளாவிய யூட்டிலிட்டி பிராண்டை உருவாக்குவதற்கான எங்கள் திட்டத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கமாகும்” என ரிவர் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அரவிந்த் மணி குறிப்பிட்டுள்ளார்.







Show
comments






Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *