காபூல்: எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அறிவித்துள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இந்த அணியில் நவீன்-உல்-ஹக் இடம் பெற்றுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தரமான சுழற்பந்து வீச்சாளர்களை உள்ளடக்கிய இந்த அணி உலகக் கோப்பை தொடரில் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் பெரிய அணிகளுக்கு அப்செட் கொடுக்க வாய்ப்புள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, இக்ராம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத், ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன்-உல்-ஹக்.