நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டைச் செயல்படுத்தவும் ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கு கார்டைப் பயன்படுத்தவும் கார்டுதாரர்கள் மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் அல்லது IVR மூலம் ‘காண்டாக்ட்லெஸ்’ அம்சத்தை இயக்க வேண்டும். அதைச் செயல்படுத்திய பிறகு பயனர்கள் மெட்ரோ நிலையங்களில் உள்ள வாடிக்கையாளர் சேவை வசதிக்குச் சென்று தொடங்கலாம். ஏற்கனவே உள்ள சேமிப்புக் கணக்கு மூலம் இந்த கார்டில் பணத்தை ஏற்றிக் கொள்ளலாம்.
இந்த டெபிட் கார்டின் பேலன்ஸ் அதிகபட்ச வரம்பு ரூ.2,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டிரான்சிட் புள்ளிகளில் பணப் பரிவர்த்தனைகள் அல்லது கார்டை தங்கள் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குடன் இணைப்பது உட்பட பல சேனல்கள் மூலம் கார்டு பேலன்ஸ் தொகையை நீங்கள் ஏற்றிக் கொள்ளலாம்.
ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் ஆஃப்லைன் வாலட்டைச் செயல்படுத்த வேண்டும். தேவையான இருப்பை பராமரிக்க வேண்டும். மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் கார்டைத் தட்ட வேண்டும். தானியங்கி கட்டண கால்குலேட்டர் (AFC) ஆஃப்லைன் வாலட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும். ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கான அதிகபட்ச வரம்பு ரூ. 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.