Business

MG Comet EV – எம்ஜி காமெட் EV காரின் முக்கிய சிறப்பு அம்சங்கள்

MG Comet EV – எம்ஜி காமெட் EV காரின் முக்கிய சிறப்பு அம்சங்கள்
MG Comet EV – எம்ஜி காமெட் EV காரின் முக்கிய சிறப்பு அம்சங்கள்


இந்தியாவின் விலை குறைந்த எலக்ட்ரிக் காராக உள்ள எம்ஜி மோட்டார் நிறுவன Comet EV காரின் விலை ரூ.1.40 லட்சம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை பட்டியலுடன் அனைத்து முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் உண்மையான ரேஞ்ச் ஆகியவற்றை தொகுத்து தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் மொரீஸ் காரேஜஸ் நிறுவன மாடல்களின் விலை கனிசமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் காமெட் உட்பட ஹெக்டர் மற்றும் ZS EV விலை ரூ.2.90 லட்சம் குறைக்கப்பட்டு ரூ.18.98 லட்சம் முதல் ரூ.24.98 லட்சம் வரை கிடைக்கின்றது.

காமெட் ரேஞ்ச் மற்றும் பேட்டரி

குறைந்த விலையில் கிடைக்கின்ற நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ற எம்ஜி காமெட் எலக்ட்ரிக் காரில் உள்ள 42 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் ஆனது முழுமையான சிங்கிள் சார்ஜில் 230 கிமீ பயணிக்கின்ற வரம்பை கொண்டுள்ளதாக சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நகரங்களுக்குள் கிடைக்கின்ற உண்மையான பயணிக்கின்ற வரம்பு 160- 180 கிமீ வரை சராசரியாக ஓட்டுபவரை பொறுத்து மாறுபடுகின்றது.

காமெட்டில் இடம்பெற்றுள்ள 3.3 kW ஏசி சார்ஜர் வாயிலாக 10 முதல் 80% சார்ஜ் பெற 5 மணிநேரமும், 0 முதல் 100% சார்ஜ் பெற 7 மணிநேரம் எடுத்துக் கொள்ளுகின்றது.

காமெட் வசதிகள்

மூன்று கதவுகளை மட்டும் பெற்றுள்ள காமெட் காரில் 4 இருக்கைகள் வழங்கப்படுள்ளது. இன்டிரியரில் மிக தெளிவான காட்சியை வழங்குகின்ற 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு உட்புறத்தில் கிரே நிறத்தை கொண்டுள்ள டேஸ்போர்டில் லேதர் சுற்றுப்பட்ட இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் வீல் பெற்றுள்ளது.

comet ev interior

கனெக்டேட் கார் எம்ஜி i-smart டெக், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, அதிகபட்ச வேகம் 30 முதல் 80 கிமீ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் அமைக்கலாம்,  ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், கீலெஸ் என்ட்ரி அண்ட் கோ, டிரைவ் மோடுகள் மற்றும் குரல் கட்டளைகள் உள்ளன.

காமெட் காரில் IP67 பேட்டரி பேக், டூயல் ஏர்பேக், ABS உடன் EBD, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பின்புற பார்க்கிங் சென்சார், ஃபாலோ மீ ஹெட்லேம்ப், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

எம்ஜி காமெட் EV விலை பட்டியல்

2 கதவுகளை மட்டும் பெற்றுள்ளதால் பின்புற இருக்கையை பயன்படுத்து ஏறுவதற்கு சிரமத்தை தருவதுடன் குறிப்பாக அதிகப்படியான சுமைகளை ஏற்றி செல்வது, பின்புற இருக்கையில் அமர்பவர்களுக்கு குறைவான லெக்ரூம், பின்புறத்தில் பூட் வசதி இல்லை, நெடுஞ்சாலை மற்றும் நெடுந்தொலைவு பயணித்திற்கு ஏற்றதல்ல, நகரத்துக்குள் குறைந்த வேகத்தில் சிறப்பான ரேஞ்ச் காமெட் வழங்குகின்றது.

இந்த மாடலுக்கு இந்திய சந்தையில் நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் டாடா டியாகோ.இவி உள்ளது.

எம்ஜி காமெட் EV விலை ரூ.6.99 லட்சம் முதல் ரூ.8.58 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலை உள்ளது.

MG Comet EV Ex-showroom Price on-road Price
Comet EV Pace ₹ 6,98,800 ₹ 7,38,763
Comet EV Play ₹ 7,88,000 ₹ 8,31,543
Comet EV Plush ₹ 8,58,000 ₹ 9,07,889

(All price Tamil Nadu)

கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடின் ஆன்ரோடு விலை தோராயமானதாகும்.

mg-comet-ev-rear

 







Show
comments






Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *