Sports

Cheteshwar Pujara,IND vs ENG 3வது டெஸ்ட்: 'நான்கு வீரர்களை'.. சர்பரைசாக தேர்வு செய்யவுள்ள பிசிசிஐ: யார்? அதிர்ச்சி தகவல்! – இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்டில் ஆச்சரியத்துடன் மீண்டும் வரக்கூடிய நான்கு இந்திய வீரர்கள்

Cheteshwar Pujara,IND vs ENG 3வது டெஸ்ட்: 'நான்கு வீரர்களை'.. சர்பரைசாக தேர்வு செய்யவுள்ள பிசிசிஐ: யார்?  அதிர்ச்சி தகவல்!  – இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்டில் ஆச்சரியத்துடன் மீண்டும் வரக்கூடிய நான்கு இந்திய வீரர்கள்
Cheteshwar Pujara,IND vs ENG 3வது டெஸ்ட்: 'நான்கு வீரர்களை'.. சர்பரைசாக தேர்வு செய்யவுள்ள பிசிசிஐ: யார்?  அதிர்ச்சி தகவல்!  – இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்டில் ஆச்சரியத்துடன் மீண்டும் வரக்கூடிய நான்கு இந்திய வீரர்கள்


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், ஒல்லி பாப் 196 ரன்களை அடித்ததால், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்டில் அதிரடி கம்பேக் கொடுத்த இந்திய அணி, யாஷஸ்வி ஜெய்ஷ்வால் இரட்டை சதத்தையும், சுப்மன் கில் சதத்தையும் எடுத்தனர். பும்ரா 9 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதனால், இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

சமயம் தமிழ் இந்திய அணி

இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 15ஆம் தேதி, ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. இதற்காக, இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நான்கு வீரர்களை சர்பரைசாக தேர்வுசெய்ய வாய்ப்புள்ளது. அவர்கள் குறித்து பார்க்கலாம்.

1.சேத்தீஸ்வர் புஜாரா:
கடைசியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 பைனலில் விளையாடிய புஜாரா, அதில் 14, 17 என சொற்ப ரன்களை மட்டும் அடித்ததால், அதன்பிறகு டெஸ்ட் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், புஜாரா சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. காரணம், ராஜ்கோட்டம் மைதானம் தான். புஜாரா ராஜ்கோட்டில்தான் பிறந்தார். இது அவருக்கு ஹோம் கிரௌண்ட் என்பதால் அபாரமாக செயல்பட வாய்ப்புள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக 5 சதம், 7 அரை சதம் உட்பட 1778 ரன்களை எடுத்துள்ளார். எனவே, புஜாராவை சேர்க்க வாய்ப்புள்ளது.

2.அஜிங்கிய ரஹானே:

இந்திய அணியின் மிடில் வரிசையில் தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட அஜிங்கிய ரஹானே, சமீப காலமாக சேர்க்கப்படுவது இல்லை. ஐபிஎல் 16ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடியதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைலில் சேர்க்கப்பட்டார். அதில் அரை சதமும் எடுத்தார். இருப்பினும், அதன் பிறகு டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இவர், 85 டெஸ்ட் போட்டிகளில் 12 சதம், 26 அரை சதம் உட்பட 5077 ரன்களை குவித்து அசத்தினார். இவரை, தேர்வுசெய்ய வாய்ப்புள்ளது.

3.இஷாந்த் ஷர்மா:

35 வயதாகும் இஷாந்த் சர்மா, கடந்த 2021ஆம் ஆண்டு, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்றார். அதன்பிறகு, வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் இஷாந்த் சர்மா, அதில் 311 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 2014ஆம் ஆண்டில், லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 7/74 என்ற சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்களை (67) எடுத்த பௌலராக இஷாந்த் சர்மா உள்ளார். தற்போது, ​​ரஞ்சிக் கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

4.புவனேஷ்வர் குமார்:

34 வயதாகும் புவனேஷ்வர் குமார், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு பிறகு, இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளில் 63 விக்கெட்களை எடுத்துள்ளார். ரஞ்சிக் கோப்பை தொடரில், உத்திரபிரதேச அணிக்காக விளையாடி வரும் இவர், சமீபத்தில் மும்பை அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களையும் சாய்த்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட்களை எடுத்துள்ளது. மேலும், இந்த 6 டெஸ்டில் 3 அரை சதங்களையும் அடித்துள்ளார். தற்போது, ​​ரஞ்சிக் கோப்பை தொடரில் சிறந்த பார்மில் இருப்பதால், அவரை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சேர்க்க வாய்ப்பில்லை.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *