பாங்க் ஆஃப் இந்தியாவின் இந்த ஃபண்ட் சந்தா செலுத்துகைகளுக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. சந்தா செலுத்துகைகளுக்கான கடைசி நாள் பிப்ரவரி 21,2024 ஆக நிர்ணயம் செய்துள்ளது. இந்த நிதியின் சொத்து ஒதுக்கீடு 35-40 சதவீத கார்பஸ் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான பத்திரங்களிலும், 45-55 சதவீதம் கடன் மற்றும் பணச் சந்தை கருவிகளிலும், 10-15 சதவீதம் கோல்ட் ஈடிஎஃப், மீதமுள்ள இருப்பு REITகளிலும் உள்ளது.
இத்திட்டத்தில் முதலீடு செய்ய தேவைப்படும் குறைந்தபட்ச முதலீட்டுத்தொகை ரூ.5000ஆகும். அதேசமயம் கூடுதலாக நீங்கள் 1000 ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். நிதி வழங்கல் வழக்கமான திட்டம் மற்றும் நேரடி திட்டங்களின் கீழ் வளர்ச்சி மற்றும் IDCW விருப்பங்களுடன் கிடைக்கும்.
இந்த புதிய ஃபண்டிற்கு அலோக் சிங் மற்றும் மித்ரேம் பருச்சா ஆகியோர் ஃபண்ட் மேனேஜர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஏற்ற திட்டம்.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.