Sports

AUS vs WI | ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா | மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 பூஜ்யம் என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது

AUS vs WI |  ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா |  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 பூஜ்யம் என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது
AUS vs WI |  ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா |  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 பூஜ்யம் என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது


கான்பெரா: 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 86 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்த ஆஸ்திரேலிய அணி எளிதான இலக்கை 6.5 ஓவர்களில் அடைந்து தொடரை முழுமையாக 3-0 என வென்று கோப்பையை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது சேவியர் பார்ட்லெட்டின் அபாரமான பந்துவீச்சால் 24.1 ஓவர்களில் 86 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அலிக் அத்தானாஸ் 32, ராஸ்டன் சேஸ் 12, கீசி கார்ட்டி 10 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.

ஜோர்ன் ஓட்லி 8, கேப்டன் ஷாய் ஹோப் 4, டெடி பிஷப் 0,ரோமரியோ ஷெப்பர்டு 1, மேத்யூ ஃபோர்டு 0, அல்சாரி ஜோசப்6, குடேகேஷ் மோதி 0 ரன்களில் நடையை கட்டினர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது கடைசி 6 விக்கெட்களை 16 ரன்களுக்கு கொத்தாக தாரை வார்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளரான சேவியர் பார்ட்லெட் 7.1 ஓவர்களை வீசி 21 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். லான்ஸ் மோரிஸ், ஆடம் சம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

87 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 6.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. தொடக்கவீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 18 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் விளாசிய நிலையில் அல்சாரி ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார். ஆரோன் ஹார்டி 2 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் வெளியேறினார். ஜோஷ் இங்கிலிஷ் 16 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது. மெல்பர்னில் நடைபெற்ற முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், சிட்னியில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 83 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி கண்டது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20கிரிக்கெட் தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் வரும் 9-ம் தேதி ஹோபர்ட் நகரில் நடைபெறுகிறது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *