மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான4 நாட்களில் ரூ.520.79 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
’ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்துள்ளதாக ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இரண்டாவது நாளில் இப்படம் ரூ.240 கோடி வசூலித்தது. முதல் 3 நாட்களை பொறுத்தவரை உலக அளவில் ரூ.ரூ.384.69 கோடி வசூலித்த இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.180 கோடி வசூலை தாண்டியிருந்தது. தமிழ்நாட்டில் ரூ.20 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.24 கோடியும், கர்நாடகாவில் ரூ.20 கோடியும், கேரளாவில் ரூ.7.55 கோடியும் வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது படம் வெளியான 4 நாட்களில் மொத்தமாக இதுவரை ரூ.520.79 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 4 நாட்களில் ரூ.500 கோடியை எட்டியிருக்கும் இப்படம் விரைவில் ரூ.1000 கோடி வசூலை எட்டலாம் என கணிக்கப்படுகிறது.
ஜவான்: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி, சஞ்சய் தத் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் படம் வசூலில் முன்னேறி வருகிறது.