Sports

ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன்: ட்ரீசா ஜாலி, காயத்ரி ஜோடி தோல்வி | Hong Kong Open Badminton Tresa Jolly Gayathri lose

ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன்: ட்ரீசா ஜாலி, காயத்ரி ஜோடி தோல்வி | Hong Kong Open Badminton Tresa Jolly Gayathri lose


கவுலூன்: ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி ஜோடி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தது.

ஹாங் காங்கின் கவுலூன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி ஜோடியானது இந்தோனேஷியாவின் அப்ரியானி ரஹயு, சிட்டி ஃபாடியா சில்வா ரணதந்தி ஜோடியை எதிர்த்து விளையாடியது. 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ட்ரீசா ஜாலி, காயத்ரி ஜோடி 8-21,14-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, அஷ்வினி பொன்னப்பா ஜோடி 18-21,7-21 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில்உள்ள ஜப்பானின் மயூ மட்சு மோட்டோ,வகானா நாகர் ஜோடியிடம் வீழ்ந்தது.





Source link

About Author

tamilnewspapper.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: