ஹலிதா ஷமீம் இயக்கும் ‘மின்மினி’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’, மற்றும் அமேசான் பிரைம் ஆந்தாலஜி தொகுப்பான‘புத்தம் புது காலை விடியாதா’வின் லோனர்ஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவரது ‘மின்மினி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதை என்பதால், 2015-ம் ஆண்டு குழந்தைப் பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை படமாக்கிவிட்டார்.