மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் இப்படம், உலகம் முழுவதும் முதல் நாள் ரூ.129.6 கோடி வசூலித்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
தற்போது 2 நாட்கள் முடிவில் இதுவரை ரூ.240.47 கோடி வசூலை குவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படும் இப்படத்தினை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.