Cinema

ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ பட பாடல் இணையத்தில் லீக் – படக்குழு அதிர்ச்சி | Shankar Game Changer song LEAKED online and goes viral

ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ பட பாடல் இணையத்தில் லீக் – படக்குழு அதிர்ச்சி | Shankar Game Changer song LEAKED online and goes viral


ஹைதராபாத்: ஷங்கர் இயக்கிவரும் ‘கேம்சேஞ்சர்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்று முன்கூட்டியே சமூக வலைதளங்களில் லீக் ஆனது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ஷங்கர், ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜாபிலம்மா’ என்ற பாடல் வெளியாவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் லீக் ஆனது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஷங்கரின் படங்களில் படப்பிடிப்புத் தளங்களில் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் என்பதால் படம் குறித்த தகவல் கடைசி வரை வெளியாகாமல் ரகசியமாகவே இருக்கும்.

‘இந்தியன் 2’ படம் வரை இதுவே தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் பாடல் தெளிவான ஆடியோவுடன் இணையத்தில் கசிந்துள்ளது. தற்போது அதனை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இப்போதே பலரும் அப்பாடலுக்கு ரீல்ஸ், ஷார்ட்ஸ் ஆகியவற்றை செய்து வெளியிட தொடங்கி விட்டனர். மேலும் சிலர், இப்பாடல் ‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற ‘ரண்டக்க ரண்டக்க’ பாடலை நினைவூட்டுவதாக கூறிவருகின்றனர். பாடல் முன்கூட்டியே கசிந்துவிட்டதால் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவை விரைவில் அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: