Health

வைட்டமின் B12 குறைபாட்டிற்கான அறிகுறிகள் என்னென்ன? – இந்த குறைபாட்டை தவிர்க்க உதவும் உணவு முறை!

வைட்டமின் B12 குறைபாட்டிற்கான அறிகுறிகள் என்னென்ன? – இந்த குறைபாட்டை தவிர்க்க உதவும் உணவு முறை!
வைட்டமின் B12 குறைபாட்டிற்கான அறிகுறிகள் என்னென்ன? – இந்த குறைபாட்டை தவிர்க்க உதவும் உணவு முறை!


சோர்வு முதல் மனநிலை மாற்றங்கள் வரை வைட்டமின் B12 குறைபாடு நமது உடலை பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு ஆட்படுத்துகிறது. இந்த வைட்டமின் குறைபாடு காரணமாக உண்டாகும் திடீர் உடல் எடை இழப்பு அதிகப்படியான சோர்வை உண்டாக்கி கவனச் சிதறலை ஏற்படுத்துகிறது. வைட்டமின் B12 அல்லது கோபாலமைன் என்று அழைக்கப்படும் இந்த வைட்டமின் DNA உற்பத்தி மற்றும் பல்வேறு முக்கியமான உடல் செயல்பாடுகளுக்கு காரணமாக அமைகிறது. வைட்டமின் B12 குறைபாடு நமது உடல் மற்றும் மனநலனில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஒரு நாளைக்கு ஒரு சராசரி மனிதருக்கு 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் B12 தேவைப்படுகிறது.

இறைச்சி அல்லது மீனை ஆறு வருடங்களுக்கு சாப்பிடாத 33 வயது பெண் ஒருவர் நடக்க கூட சிரமப்பட்டார் என்பது ஒரு அறிக்கையில் வெளியானது. இந்தப் பெண் தனது 20களில் இறைச்சி மற்றும் மீன் சாப்பிடுவதை கைவிட்டு உள்ளார். ஆரம்பத்தில் அனைத்தும் சிறப்பாக இருந்துள்ளது. எனினும் ஒரு வருடம் கழித்து அவருக்கு மோசமான சோர்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நடப்பது கூட அவருக்கு சிரமமாக இருந்துள்ளது. அவர் சீஸ், முட்டை மற்றும் பால் போன்றவை சாப்பிட்ட போதும் அவருடைய தினசரி வைட்டமின் B12 தேவையை அவரால் பூர்த்தி செய்ய இயலவில்லை.

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள்

வைட்டமின் B12 ரத்தசோகை பிரச்சனையை கூட ஏற்படுத்தலாம். இது வழக்கத்திற்கு மாறாக பெரிய அளவிலான மற்றும் முதிர்ச்சி அடையாத சிவப்பு ரத்த அணுக்களால் வகையிடப்படுகிறது. இந்த வகையான ரத்த சோகை சோர்வு, வலிமை இழந்து காணப்படுதல் ,வெளிர் சருமம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். நமது உடலில் வைட்டமின் B12 போதுமான அளவு இல்லாத போது ஆரோக்கியமான ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதற்கு நமது உடல் போராடுகிறது. இதன் காரணமாக ஆக்சிஜன் போக்குவரத்து தடைபட்டு ரத்தசோகை சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுகிறது.

விளம்பரம்

வைட்டமின் B12 குறைபாடு மிதமான முதல் தீவிரமான ஒரு சில நரம்பு சார்ந்த சிக்கல்களை கூட ஏற்படுத்தலாம். கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு அல்லது மரத்துப்போதல், நடப்பதில் சிக்கல், நேராக நிற்பதற்கு சிரமப்படுதல், ஞாபக மறதி, அறிவுத்திறன் குறைபாடுகள் மற்றும் மனச்சோர்வு போன்றவை இதன் அறிகுறிகள்.

நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் விளைவுகள் தவிர வைட்டமின் B12 குறைபாடு மனச்சோர்வு, பதட்டம் மற்றும் சைக்கோசிஸ் போன்ற மனநிலை சம்பந்தப்பட்ட கோளாறுகளுடன் தொடர்புடையதாக அமைகிறது. மேலும் வைட்டமின் B12 குறைபாடு தமனிக்கூழ்மைத் தடிப்பு அல்லது நாடிக்கூழ்மைத் தடிப்பு (Atherosclerosis) மற்றும் ஒரு சில இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம் வைட்டமின் /B12 குறைபாடு காரணமாக உருவாகிறது.

விளம்பரம்

Also read |
இந்த 5 இலைகளை சாப்பிடுங்க.. யூரிக் ஆசிட் எவ்வளவு இருந்தாலும் சட்டுனு குறைஞ்சிடும்..!

வைட்டமின் B12 அசைவ உணவுகளில் அதிகப்படியாக காணப்படுவதால் சைவ உணவு உண்ணக்கூடிய நபர்களில் இந்த வைட்டமின் குறைபாடு அதிக அளவில் ஏற்படுகிறது. எனினும் சீஸ் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், தானியங்கள், பழ மற்றும் காய்கறி சாறுகள், டோஃபு, வைட்டமின் தண்ணீர், வே பவுடர் போன்றவற்றில் வைட்டமின் B12 காணப்படுகிறது. குறிப்பாக சைவ உணவு சாப்பிடுபவர்கள் அடிக்கடி வைட்டமின் B12 அளவுகளை சரி பார்த்து அதற்கேற்ற வகையில் உணவு மாற்றங்களை செய்து வர அதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களை தவிர்க்கலாம்.

விளம்பரம்

வைட்டமின் பி12 குறைபாடு பின்வரும் நபர்களில் பெரும்பாலும் காணப்படுகிறது:

நம் ஏற்கனவே கூறியது போல சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இந்த குறைபாடு எளிதில் ஏற்படலாம்.

  1. 50 வயதைக் கடந்த முதியவர்கள்

  2. இரைப்பை குடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்

  3. உடல் எடை இடப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள்

  4. நீண்ட காலமாக ஆன்டாசிட் பயன்படுத்தி வருபவர்கள்

  5. பெர்னிசியஸ் அனிமியாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்

  6. அதிகப்படியாக மது அருந்துபவர்கள்

சிறந்த வீடியோக்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *