
புதுச்சேரி: புதுவையில் படகு கவிழ்ந்ததன் எதிரொலியாக, சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சுற்றுலா நகரமான புதுவையில் பல்வேறு சுற்றுலா தொழில்கள் புதிதாக உருவெடுத்து வருகின்றன. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகில் கடலுக்குள் சென்று, உலா வருவதை பெரிதும் விரும்புகின்றனர். அரசிடம் அனுமதி பெறாமலும், போதிய பாதுகாப்பு வசதியின்றியும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை படகுகளில் கடலுக்குள் அழைத்துச் செல்கின்றனர்.