
மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.574.89 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
‘ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்துள்ளதாக ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இரண்டாவது நாளில் இப்படம் ரூ.240 கோடி வசூலித்தது. முதல் 3 நாட்களை பொறுத்தவரை உலக அளவில் ரூ.ரூ.384.69 கோடி வசூலித்த இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.180 கோடி வசூலை தாண்டியிருந்தது.
தமிழ்நாட்டில் ரூ.20 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.24 கோடியும், கர்நாடகாவில் ரூ.20 கோடியும், கேரளாவில் ரூ.7.55 கோடியும் வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. படம் வெளியான 4 நாட்களில் ரூ.520.79 கோடியை வசூலானதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், வார நாட்களாக இருந்தபோதிலும் திங்கட்கிழமை உலக அளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள படம் 5 நாட்கள் முடிவில் ரூ.574.89 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.