சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம். இதன் மூலம் வீடியோ அழைப்பில் பயனர்கள் தங்கள் ஸ்க்ரீனை ஷேர் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த முழு விவரம்.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது ஸ்க்ரீன் ஷேர் செய்யும் அம்சம் வெளியாகி உள்ளது.
இந்த புதிய அம்சத்தை அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் பயன்பாட்டுக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் அறிவித்தார். வாட்ஸ்அப்பின் இந்த நகர்வு கூகுள் மீட், ஸூம் போன்ற வீடியோ காலிங் செயலிகளுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்த பிறகு வீடியோ அழைப்பில் பிற பயனர்களுடன் தங்கள் திரையை பகிரும் லோகோ டிஸ்பிளே ஆகும். அதற்கு அனுமதி கொடுப்பதன் மூலம் பயனர்கள் தங்கள் திரையை பகிரலாம். இந்த அம்சம் பயனர்களுக்கு பெரிதும் உதவும் என்று தெரிகிறது. தற்போது வாட்ஸ்அப் தளத்தில் ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ அழைப்பில் பங்கேற்க முடியும். முன்னதாக, ஸ்க்ரீன் ஷேர் செய்யும் அம்சம் பீட்டா பயனர்களுக்கு மட்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்றது.
Screen sharing on WhatsApp video calls starts rolling out today. We’ve heard a lot of requests for this and are excited for people to start using it! pic.twitter.com/Ra9SEC7TYB
— Will Cathcart (@wcathcart) August 8, 2023