Tech

வாட்ஸ்அப்பில் பயனர்களின் மொபைல் எண்ணை சேமிக்காமல் நேரடியாக மெசேஜ் செய்வது எப்படி? | How to directly message users on WhatsApp without saving their mobile number

வாட்ஸ்அப்பில் பயனர்களின் மொபைல் எண்ணை சேமிக்காமல் நேரடியாக மெசேஜ் செய்வது எப்படி? | How to directly message users on WhatsApp without saving their mobile number
வாட்ஸ்அப்பில் பயனர்களின் மொபைல் எண்ணை சேமிக்காமல் நேரடியாக மெசேஜ் செய்வது எப்படி? | How to directly message users on WhatsApp without saving their mobile number


சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப்பில் தெரியாத பயனர்களின் எண்களை சேமிக்காமல் (Save) நேரடியாக மெசேஜ் செய்யும் வகையிலான அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த அம்சம் அறிமுகமாகி உள்ளதாக தகவல்.

பயனர்கள் வாட்ஸ்அப்பில் மற்ற பயனர்களுக்கு மெசேஜ் அல்லது சாட் செய்ய அவர்களது எண்ணை தங்கள் போனில் சேமிக்க வேண்டும். அதன் பிறகு தான் அவர்களை வாட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொள்ள முடியும். இப்போது எண்களை சேமிக்காமல் நேரடியாக சாட் செய்ய முடியும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்களுக்கு படிப்படியாக பயன்பாட்டுக்கு கிடைக்கும் என வாட்ஸ்அப் மெசஞ்சர் மேம்பாடுகளை நுணுக்கமாக கவனித்து வரும் WABetaInfo தெரிவித்துள்ளது. பயனர்கள் தங்கள் செயலியை அப்டேட் செய்வதன் மூலமாகவும் இதனை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் மொபைல் எண்ணை சேமிக்காமல் நேரடியாக மெசேஜ் செய்வது எப்படி?

  • பயனர்கள் வாட்ஸ்அப் மெசஞ்சரை ஓபன் செய்ய வேண்டும்
  • நியூ சாட் பட்டனை ஓபன் செய்ய வேண்டும்
  • அதில் சேர்ச் ஆப்ஷனில் (லென்ஸ் வடிவில் உள்ள பட்டன்) பயனர்கள் தாங்கள் சாட் செய்ய விரும்பும் எண்ணை உள்ளிட வேண்டும்
  • அதை செய்த பின்னர் அந்த எண்ணுக்கு பக்கத்தில் சாட் என ஆப்ஷன் வரும். அதன் மூலம் அந்த எண்ணுக்கு நேரடியாக மெசேஜ் செய்யலாம்





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *