Sports

வத்தலக்குண்டில்மாரத்தான் ஓட்டப் போட்டி- தினமணி

வத்தலக்குண்டில்மாரத்தான் ஓட்டப் போட்டி- தினமணி
வத்தலக்குண்டில்மாரத்தான் ஓட்டப் போட்டி- தினமணி



வத்தலக்குண்டு அருகே பி.வி.பி. கல்லூரி சாரில் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணாவு மாரத்தான் ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியை வத்தலக்குண்டு ஒன்றியக் குழுத் தலைவி பரமேஸ்வரி முருகன் தொடங்கி வைத்தாா். ஆண்களுக்கான மாரத்தான் ஓட்டம் வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் முதல் கே. சிங்காரக்கோட்டை வரை 7 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது. இதே போல, பெண்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.

இதில் பங்கேற்ற பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. தொடக்கப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவர்கள் மரக்கன்றுகளை கைகளில் ஏந்தியபடி பங்கேற்றதுடன், மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில், திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சோந்த திரளானோா் பங்கேற்றனா். பிறகு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி தாளாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் உபகார செல்வம் முன்னிலை வகித்தார். மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு கெய்னப் குழும பொது மேலாளா் உஷா சிவன் ரொக்கப்பரிசு, பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினாா்.

பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில், கல்லூரிப் பேராசிரியைகள், மாணவர்கள் பங்கேற்றனர். உடல் கல்வி ஆசிரியர் செல்லப்பாண்டி நன்றி கூறினார்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர…





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *