
சென்னை: வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வண்டலூர் உயிரியல் பூங்கா சென்னை, புறநகர் பகுதி மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாகதிகழ்கிறது. தினமும் சுமார் 4 ஆயிரம் பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.
இப்பூங்காவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவது வழக்கம். ஓணம் பண்டிகைக்காக பள்ளிக் குழந்தைகளுக்கு நாளை (ஆக.29) சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது. அன்று அதிக அளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவேமாணவர்களின் வசதிக்காக, செவ்வாய்க்கிழமையாகஇருந்தாலும், பூங்கா நாளை திறந்திருக்கும். கிண்டி சிறுவர் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அப்பூங்கா மூடப்பட்டுள்ளது.