Last Updated : 13 Sep, 2023 05:48 AM
Published : 13 Sep 2023 05:48 AM
Last Updated : 13 Sep 2023 05:48 AM
மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் ‘ஜவான்’. இதில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி, சஞ்சய் தத் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த 7-ம் தேதி இந்தப் படம் வெளியானது. முதல் நாளிலேயே உலகளவில் ரூ.150 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. எந்த இந்திய படமும் இதற்கு முன்பு இந்த வசூல் சாதனையை நிகழ்த்தியதில்லை. வெறும் 4 நாட்களில் ரூ.500 கோடி வசூலை எட்டியது இந்தப் படம். இந்நிலையில் நேற்று முன் தினம் வரை ரூ.574.89 கோடியை வசூலித்துள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.600 கோடியை நெருங்கியுள்ள இந்தப்படம் இன்னும் வசூல் சாதனைப் படைக்கும் என்கிறார்கள்.
தவறவிடாதீர்!