State

ராமசாமி படையாட்சியாரின் சமூக நீதி பங்களிப்பைப் போற்றுவோம்: ராமதாஸ், அன்புமணி வலியுறுத்தல் | Ramdoss, Anbumani pays respect for SS Ramasamy Padayachiyar

ராமசாமி படையாட்சியாரின் சமூக நீதி பங்களிப்பைப் போற்றுவோம்: ராமதாஸ், அன்புமணி வலியுறுத்தல் | Ramdoss, Anbumani pays respect for SS Ramasamy Padayachiyar


சென்னை: எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் சமூக நீதி பங்களிப்பைப் போற்றுவோம் என்று அவரது பிறந்தநாளில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ராமதாஸ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 106-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. உழவர் உழைப்பாளர் கட்சியை நிறுவிய அவர், அக்கட்சியின் மூலம் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு குரல் கொடுத்தவர். அவரது பிறந்த நாளில் சமூக நீதிக்கான அவரது பங்களிப்பை நாம் போற்றுவோம்” என்று கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “உழைக்கும் குடியான வன்னிய மக்களின் சமூக நீதிக்காக இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்த உழைப்பாளர் மக்கள் கட்சியின் நிறுவனர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 106-ஆவது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவரது பணிகளையும், சிறப்புகளை போற்றுவோம்… வணங்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *