
பரத்பூர்: குஜராத்தின் பாவ்நகர் மாவட்டம் திகோரில் இருந்து சுமார் 50 பேர் தனியார் பேருந்து ஒன்றில் உத்தர பிரதேச மாநிலம், மதுரா நகருக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டனர். பேருந்து நேற்று அதிகாலை ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டம், லக்கன்பூர் பகுதியில் ஒரு பாலத்தின் மீது செல்லும்போது பழுதடைந்து நின்றுவிட்டது. பயணிகள் சிலர் பேருந்தை விட்டு இறங்கி, அதன் பின்னால் நின்றிருந்தனர்.
இந்நிலையில், வேகமாக வந்த ஒரு லாரி, பயணிகள் மீதும் பிறகு பேருந்து மீதும் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 ஆண்களும் 6 பெண்களும் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர்.