இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை தன் மருமகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்துள்ளார்.
1
/7
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா. 2009ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ஜடேஜா, 15 ஆண்டுகளில் முக்கிய வீரராக உயர்ந்துள்ளார்.
2
/7
டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகள் என்று அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற நிலையை எட்டியுள்ளார். மேலும் சிஎஸ்கே அணிக்காக கேப்டன்சியும் செய்துள்ளார்.
3
/7
இவருக்கு 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ரிவாபா சோலங்கியை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2017ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் பாஜகவில் இணைந்த ரிவாபா ஜடேஜா, தற்போது சட்டமன்ற உறுப்பினராக வருகிறார். அண்மையில் கூட ரிவாபா ஜடேஜாவும், ரவீந்திர ஜடேஜாவும் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலுக்கு சென்று வந்தனர்.
4
/7
இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் ஜடேஜா பல்வேறு குற்றச்சாட்டுகளை ஜடேஜா மற்றும் அவரது மருமகள் மீது சுமத்தியுள்ளார். அதில், உண்மை சொல்ல வேண்டுமென்றால், எனக்கும் ஜடேஜாவுக்கும் அவருக்கும் மனைவி ரிவாபாவுக்கும் எந்த உறவும் கிடையாது. திருமணம் முடிந்த 3 மாதங்களிலேயே குடும்பத்திற்குள் பிரச்சனைகள் எழுந்தன. நான் இப்போது ஜாம் நகரில் வசிக்கிறேன். அதே பகுதியில் ஜடேஜா தனியாக ஒரு பங்களாவில் குடியிருக்கிறார்.
5
/7
நாங்கள் இருவரும் ஒரே பகுதியில் இருந்தாலும், அவரை பார்ப்பதே கிடையாது. ரிவாபா அப்படி என்ன மேஜிக் செய்தார் என்று தெரியவில்லை. ஜடேஜா என்னுடைய மகன். அவருக்கு திருமணம் செய்து வைக்க கூடாது. மேலும் அவர் கிரிக்கெட் வீரராக இல்லாமல் இருந்திருக்கலாம் என்று தோன்ற வைத்துவிட்டார். இவை இரண்டும் நடக்காமல் இருந்திருந்தால், அனைத்தும் நன்றாக இருந்திருக்கும்.
6
/7
திருமணம் முடிந்த 3 மாதத்தில், ஜடேஜாவின் மனைவி என்னிடம் அனைத்து சொத்துக்களும் தனது பெயருக்கு மாற்றப்பட வேண்டும் என்று கூறினார். குடும்பத்திற்கும் அவர் மூலம் பிளவு வந்துவிட்டது. அவருக்கு குடும்பம் தேவையில்லை. சுதந்திரமாக வாழ வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.
7
/7
நானும், ஜடேஜாவின் சகோதரியுமான நய்னாபாவும் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் குடும்பத்தில் உள்ள 50 பேரை எப்படி தவறாக சொல்வார்கள்? அவர் குடும்பத்தில் உள்ள யாருடனும் உறவுகளைப் பாராட்டுவதில்லை. அனைவரையும் வெறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.