Cinema

“ரத்தம், வலி, மரணத்துக்கு அருகே சென்ற அனுபவம்” – ‘மார்க் ஆண்டனி’ ரிலீஸ் குறித்து விஷால் நெகிழ்ச்சி | vishal tweet about mark antony

“ரத்தம், வலி, மரணத்துக்கு அருகே சென்ற அனுபவம்” – ‘மார்க் ஆண்டனி’ ரிலீஸ் குறித்து விஷால் நெகிழ்ச்சி | vishal tweet about mark antony


சென்னை: ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாவதையடுத்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் இன்று (செப்.15) வெளியாகிறது.

இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த ஓராண்டில் கடின உழைப்பு, ரத்தம், வியர்வை, வலி, காயங்கள், மரணத்துக்கு அருகே சென்று வந்த அனுபவங்களுக்குப் பிறகு, நான் மட்டுமல்ல ‘மார்க் ஆண்டனி’ உலத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த குழுவும், செப்.15 அன்று இந்த டைம் டிராவல் கேங்ஸ்டர் படத்தை உலகம் முழுவதும் சமர்பிக்க கிட்டத்தட்ட தயாராகிவிட்டோம்.

நான் இரண்டு கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். ஒன்று திருப்பதியில் நான் சென்று சரணடைந்த கடவுள். மற்றொரு கடவுள், திரையரங்குகளில் அவ்வப்போது நான் பார்க்கும், ஒரு நடிகனாக கடந்த 19 ஆண்டுகளாக என்னுடைய பயணத்தை ஊக்குப்படுத்தி ஆசிர்வதித்து வருபவர்கள்” இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: