Sports

ரச்சின் இரட்டை சதம் * வலுவான நிலையில் நியூசிலாந்து

ரச்சின் இரட்டை சதம் * வலுவான நிலையில் நியூசிலாந்து
ரச்சின் இரட்டை சதம் * வலுவான நிலையில் நியூசிலாந்து




மவுன்ட் மவுன்கனுய்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி திணறல் பேட்டிங்கை வெளிப்படுத்துகிறது. ரச்சின் இரட்டை சதம் விளாசினார்.
நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட 'டாங்கிவாய்' கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மவுன்ட் மவுன்கனுவில் முதல் டெஸ்ட் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணியில் 6 வீரர்கள் அறிமுக வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 258/2 ரன் எடுத்திருந்தது. வில்லியம்சன் (112), ரச்சின் ரவிந்திரா (118) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரச்சின் அபாரம்
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. வில்லியம்சன் 118 ரன்னில் அவுட்டானார். மிட்செல் (34), பிளண்டல் (11), பிலிப்ஸ் (39) நிலைக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ரச்சின், முதன் முறையாக இரட்டை சதம் கடந்தார். இவர் 240 ரன் எடுத்த போது, ​​தென் ஆப்ரிக்க கேப்டன் நெய்ல் பிராண்டு சுழலில் போல்டானார். ஹென்றி 27 ரன் எடுத்தார்.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 511 ரன் குவித்து ஆட்டமிழந்தது. தென் ஆப்ரிக்காவின் பிராண்டு அதிகபட்சம் 6 விக்கெட் சாய்த்தார்.
திணறம் ஆட்டம்
அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு எட்வர்டு மூரே (23), கேப்டன் பிராண்டு (4) ஜோடி சுமரான துவக்கம் தந்தது. ஜுபைர் 22 ரன் எடுத்தார். இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 80/4 ரன் எடுத்து, 431 ரன் பின்தங்கி இருந்தது. பெடிங்ஹாம் (29), பீட்டர்சன் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *