
சென்னை: விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் 50 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2022 ஏப்ரல் மாதம் வெளியாகி இருந்த திரைப்படம் பீஸ்ட். இதில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சதீஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 236.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் முதல் சிங்கிள் பாடலாக அரபிக் குத்து பாடல் கடந்த ஆண்டு ‘பிப்ரவரி 14’ அன்று வெளியாகி இருந்தது. இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார். சுமார் 4.40 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்தப் பாடலின் வரிகள் குறித்து அப்போது வைரலாக பேசப்பட்டு இருந்தது. பாடலை அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி ஆகியோர் பாடி இருந்தனர். இந்நிலையில் இப்பாடல் யூடியூப்பில் 500 மில்லியன் (50 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
வீடியோ: