Tech

யுஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் ஐபோன் 15 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்தது ஆப்பிள்: சிறப்பு அம்சங்கள் | apple launched iphone 15 series phone in world market features

யுஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் ஐபோன் 15 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்தது ஆப்பிள்: சிறப்பு அம்சங்கள் | apple launched iphone 15 series phone in world market features


கலிபோர்னியா: உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ் என ஐபோன் 15 சீரிஸ் வரிசையில் நான்கு போன்களை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம்தான் ஈட்டி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவுகள் சொல்கின்றன. தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புதிய மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும். அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 15 சீரஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் சிறப்பு அம்சங்கள்

  • 6.1 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 15
  • 6.7 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 15 பிளஸ்
  • டைனமிக் ஐலேண்ட் இதில் உள்ளது
  • பிங்க், மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு என 5 வண்ணங்களில் கிடைக்கும்
  • 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • ஏ16 பயோனிக் சிப்
  • சாட்டிலைட் துணையுடன் ரோட்ஸைட் அசிஸ்டன்ட்
  • 2 ஆண்டுகளுக்கு சாட்டிலைட் சேவை இலவசம்
  • பாரம்பரிய லைட்னிங் போர்டுக்கு விடை கொடுத்துள்ளது ஆப்பிள். யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் ஐபோன் 15 போன்களில் இடம் பெற்றுள்ளது
  • 5ஜி நெட்வொர்க்
  • செராமிக் ஷீல்ட்
  • ஐபோன் 15 போனின் விலை ரூ.79,900
  • ஐபோன் 15 பிளஸ் போனின் விலை ரூ.89,900
  • வரும் 15-ம் தேதி முதல் இந்த போன்களை முன்பதிவு செய்யலாம். 22-ம் தேதி முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 15 புரோ, ஐபோன் 5 புரோ மேக்ஸ் சிறப்பு அம்சங்கள்

  • டைட்டானியம் ஃப்ரேம்
  • ஏ17 புரோ சிப்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட். யுஎஸ்பி 3
  • சூப்பர் ஹை ரெஸலுஷன் போட்டோ
  • ஆக்க்‌ஷன் பட்டன்
  • Wi-Fi 6E
  • ஸ்பேஷியல் வீடியோ
  • ஐபோன் 15 புரோ போனின் ஆரம்ப விலை ரூ.1,34,900
  • ஐபோன் 5 புரோ மேக்ஸ் போனின் விலை ரூ.1,59,900
  • இந்த போனுடன் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *