புதுடெல்லி: மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு நாளை செல்ல உள்ள பிரதமர் மோடி, அம்மாநிலங்களில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை பயணம் மேற்கொள்கிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரிய ஊக்கத்தை வழங்கும் ஒரு நடவடிக்கையாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் வளாகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.