
சென்னை: அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள படம், ‘தி ரோட்’. இதில், ஷபீர் கல்லாரக்கல், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மதுரையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் த்ரிஷா இதில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளார். இதன் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அக். 6ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.