Business

முதன்முறையாக நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை அதிகரித்த டாடா…

முதன்முறையாக நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை அதிகரித்த டாடா…
முதன்முறையாக நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை அதிகரித்த டாடா…


புதிய நெக்ஸான் கார் இரண்டு இஞ்சின் அப்ஷனில் கிடைக்கிறது.

  • 1-MIN READ
    | News18 Tamil
    Tamil Nadu
    Last Updated :

0106

2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் (TATA Nexon facelift) காரை ரூ.8.10 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ். தற்போது இதன் அறிமுக விலையின் காலகட்டம் முடிவடைந்துள்ள நிலையில், காரின் விலையை ரூ.20,000 வரை அதிகரிப்பதாக கூறியுள்ளது டாடா நிறுவனம்.

விளம்பரம்

0206

புதிய நெக்ஸான் கார், ஸ்மார்ட், ஸ்மார்ட்+, ஸ்மார்ட்+ S, Pure, Pure S, Creative, Creative+, Creative+ S, Fearless, Fearless S and Fearless+ S போன்ற மாடல்களில் கிடைக்கிறது. இதில் ‘+’ ஆப்ஷன் உள்ள கார்களில் கூடுதல் வசதி பொறுத்தப்பட்டுள்ளது. S ஆப்ஷன் உள்ள ஒவ்வொரு மாடலிலும் சன்ரூஃப் வசதியை கொண்டிருக்கிறது.

விளம்பரம்

0306

புதிய டாடா நெக்ஸான் விலை : 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் வரும் என்ட்ரி லெவல் ஸ்மார்ட் பெட்ரோல் வேரியண்ட் காரின் விலை ரூ.5,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற அனைத்து மாடல்களின் விலையும் ரூ.10,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. டூயல் டோன் வேரியண்ட் காரின் விலை அதிகப்பட்சமாக ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. காரின் டைம்ன்ஸனைப் பொறுத்தவரை, புதிய நெக்ஸான் 3995 mm நீளமும், 1804 mm அகலமும், 1620 mm உயரமும், 2498 mm வீல் பேஸையும் கொண்டுள்ளது.

விளம்பரம்

0406

அதே சமயம் டாடா மோட்டாரின் மற்றொரு காரான பஞ்ச் (Punch), 3827 mm நீளமும், 1742 mm அகலமும், 1615 mm உயரமும், 2445 mm வீல் பேஸையும் கொண்டுள்ளது.

விளம்பரம்

0506

இந்தக் காரில் உள்ள வசதிகளைப் பற்றி கூற வேண்டுமென்றால், புதிய டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் 10.25 இன்ச் மிதக்கும் தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர், காற்றோட்டமான முன்பக்க இருக்கைகள், ஏர் பூயூரிஃபையர், சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், வைப்பருடன் கூடிய ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப், தொட்டு இயக்கக் கூடிய வகையில் HVAC கட்டுப்பாடு என சொல்லிக்கொண்டே போகலாம்.

விளம்பரம்

0606

நெக்ஸான் பவர்ட்ரைய்ன் : புதிய நெக்ஸான் கார் இரண்டு இஞ்சின் அப்ஷனில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் இஞ்சின், அதிகபட்சமாக 115 hp பவரையும், 260 Nm இழுவிசையும் கொண்டுள்ளது. இந்த இஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆடோமெட்டிக் கியர் பாக்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. அடுத்ததாக, 1.2 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் இஞ்சின், அதிகபட்சமாக 120 hp பவரையும், 170 Nm இழுவிசையும் கொண்டுள்ளது. 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், ஆட்டோமெட்டிக் மற்றும் டூயல் க்ளட்ச் DCA ஆட்டோமெட்டிக் என பெட்ரோல் இஞ்சின் நான்கு கியர் பாக்ஸ் ஆப்ஷனைப் பெற்றுள்ளது.

விளம்பரம்
  • First Published :



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *