
கும்பகோணம்: 'விடுதலை – பாகம் 2' படத்தின் படபிடிப்பை முடித்த கையோடு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் நடைபெற்றது.
‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப்படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். சூரியுடன், சசிகுமார், உன்னி முகுந்தன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.