Business

மின் ஏர்காப்டர் உருவாக்கும் புதிய முயற்சியில் மாருதி சுஸுகி!

மின் ஏர்காப்டர் உருவாக்கும் புதிய முயற்சியில் மாருதி சுஸுகி!
மின் ஏர்காப்டர் உருவாக்கும் புதிய முயற்சியில் மாருதி சுஸுகி!


கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி,  தற்போது வானத்தை இலக்காக வைத்து மின் ஏர் காப்டர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

வாகன உற்பத்தி சந்தையில் முன்னணி நிறுவனமான மாருதி சுஸுகி, 2023 ஆம் ஆண்டில்  20 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை ஆகியுள்ளன.  அதேபோல் 2.69 லட்சம் கார்களை ஏற்றுமதியும் செய்துள்ளது மாருதி சுஸுகி நிறுவனம்.  இது அந்த நிறுவனத்தின் வரலாற்றில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.  இதையடுத்து, மாருதி சுஸுகி நிறுவனம் தனது புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.

இதையும் படியுங்கள் ; பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆட்சியை தக்கவைப்பாரா நிதீஷ் குமார்?

கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி,  தற்போது வானத்தை இலக்காக வைத்து மின் ஏர் காப்டர்களை உருவாக்க உள்ளது.  இந்த மின் ஏர் காப்டரில் விமானி உட்பட குறைந்தபட்சம் மூன்று பயணிகளை பயணம் செய்யும் அளவில் வடிவமைக்க உள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.  வழக்கமான ஹெலிகாப்டரை விட சிறிய எலெக்ட்ரிக் ஏர் காப்டர்களை தயாரிக்க மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் கூறியதாவது: 

இந்த புதிய எலெக்ட்ரிக் ஏர் காப்டர்கள் தரையில் ஓடும் உபெர் மற்றும் ஓலா கார்களைப் போன்ற ஏர் டாக்சிகளாக இருக்கும்.  இதையடுத்து,SkyDrive – 12 யூனிட் மோட்டார்கள் 2025 ஆம் ஆண்டு ஜப்பானில் நடக்கும் ஒசாகா எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும்.  அதன்பின், முதலில் ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் விற்பனைக்கு வைக்கப்படலாம்.

இந்த ஏர் காப்டரின் எடை வழக்கமான ஹெலிகாப்டரில் கிட்டத்தட்ட பாதியாக இருக்கும். இது ஹெலிகாப்டரை விட மலிவானதாக இருக்க வேண்டும்.  இது தரையிறங்கும் மற்றும் தரையிறங்கும் இடமாக மேற்கூரைகளை உருவாக்குவதை செயல்படுத்துகிறது.  இது விமான உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவுகளில் குறிப்பிடத்தக்க குறைப்பை ஏற்படுத்துகிறது” இவ்வாறு மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *