![மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டம் மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டம்](https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/09/xlarge/1120498.jpg)

கலிபோர்னியா: அடுத்த ஆண்டு மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 12-ம் தேதி ஆப்பிள் நிறுவனம் நடத்தும் நிகழ்வில் ஆப்பிள் 15 சீரிஸ் போன்கள் உட்பட பல்வேறு சாதனங்களை அந்நிறுவனம் செய்ய உள்ளது.
உலக மொபைல் போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், லேப்டாப் சந்தையிலும் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் வகையில் மலிவு விலையில் மேக்புக் லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கூகுள் குரோமுக்கு சவால் கொடுக்கும் வகையில் இந்தத் திட்டத்தை ஆப்பிள் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.