Health

மருந்தைவிட பத்து மடங்கு வேகமாக இருமல், சளியை விரட்டும் சூப்பர் பானம்… ஒருமுறை செஞ்சு குடிச்சு பாருங்க…

மருந்தைவிட பத்து மடங்கு வேகமாக இருமல், சளியை விரட்டும் சூப்பர் பானம்… ஒருமுறை செஞ்சு குடிச்சு பாருங்க…
மருந்தைவிட பத்து மடங்கு வேகமாக இருமல், சளியை விரட்டும் சூப்பர் பானம்… ஒருமுறை செஞ்சு குடிச்சு பாருங்க…


​வீட்டிலேயே இருமலை சரிசெய்யும் பானம் செய்வது எப்படி?தேவையான பொருள்கள்

பைனாப்பிள் ஜூஸ் – 1 கப்,
எலுமிச்சை சாறு – கால் கப்,
இஞ்சி – 3 இன்ச் அளவு,
தேன் – 1 ஸ்பூன்,
மிளகு தூள் – அரை ஸ்பூன்

​இருமல், சளியை விரட்ட அன்னாசி பழம்

அன்னாசி பழத்தில் ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்திருக்கின்ற.ன

இவை பருவ காலங்களில ஏற்படும் நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.

​இருமல், சளியை விரட்ட எலுமிச்சை சாறு

எலுமிச்சை ஜூஸ் குடித்தால் சளி பிடிக்கும் என்கிற தவறான கருத்து இருக்கிறது. ஆனால் எலுமிச்சை பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி இருப்பதால் இது நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்து, பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட நோய் தொற்றுக்களைக் குறைக்கும் தன்மை உடையது.

அதனால் சளி, இருமல் பிரச்சினை இருக்கும்போது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது நல்ல பயனைத் தரும். அதனால் தான் இந்த பானத்தில் எலுமிச்சை சாறு சேர்க்கப்படுகிறது.

​இஞ்சி சாறு சேர்ப்பதன் பயன்கள்

இஞசியில் ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் நிறைந்து இருக்கின்றன

இதன் சாறை சேர்த்துக் கொள்வதன் மூலம் வைரஸ் தொற்றுக்களைத் தாக்கி வேகமாக அழிக்க முடியும். இருமல் மற்றும் சளியில் இருந்து வேகமாக மீள முடியும்.

​மிளகு சேர்ப்பதன் நன்மைகள்

10 மிளகு இருந்தால் போதும் எதிரியின் வீட்டில் கூட உணவு சாப்பிடலாம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு விஷயத்தையே முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு.

மிளகில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி வைரஸ் பண்புகள் நுரையீரல் மற்றும் தொண்டையில் ஏற்படும் தொற்றுக்களை விரட்டி இருமல் மற்றும் சளியில் இருந்து வேகமாக விடுபட உதவுகிறது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *