
ஹனோய்: இந்தோ – அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடியுடன் கணிசமான விவாதங்களை நிகழ்த்தியதாகவும், ஜி20 உச்சி மாநாட்டில் மோடியை சந்தித்தபோது மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
வியட்நாம் தலைநகரில் ஹனோயில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: "ஜி 20 உச்சி மாநாட்டை நடத்திய இந்திய பிரதமர் மோடியின் தலைமை மற்றும் விருந்தோம்பலுக்காக நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி வெள்ளை மாளிகை வந்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம்.