மாநிலம்

மதுரையில் நேரக் கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 205 வழக்குகள் பதிவு | Madurai Police action 205 cases registered in Diwali 

மதுரையில் நேரக் கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது 205 வழக்குகள் பதிவு | Madurai Police action 205 cases registered in Diwali 


சென்னை: மதுரையில் நேரக் கட்டுபாடு மீறி பட்டாசு வெடித்த நபர்கள் மீது 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல் துறையினர் தெரிவித்தனர். பொதுவாக தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையின்போது, விபத்து மற்றும் சுற்றுச்சூழல் மாசு தடுத்தல், பட்டாசு வெடிக்க, காலை 6 முதல் 7 மணி, மாலை 7 முதல் 8 மணி என, நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினரும் எச்சரிக்கைவிடுத்து இருந்தனர்.

இந்நிலையில், மதுரை மாநகரில் கடந்த 11-ம் தேதி தீபாவளிக்கு முந்தைய நாள் நேரக் கட்டுபாடு மீறி பட்டாசு வெடித்ததாக 6 வழக்கு பதிவு செய்யப்பட்டன. இது போன்ற தீபாவளி தினத்தன்று 141 வழக்குகளும் என மொத்தம் 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அரசு விதிமுறையை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது. மாநகரம் நீங்கலாக மாவட்டத்தின் இதர பகுதிகளில், நேரக் கட்டுபாட்டை மீறி பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 58 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன என காவல் துறையினர் தெரிவித்தனர்.

Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *