மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் அவுரங்காபாத் நகரின் பெயர் சத்ரபதி சம்பாஜினி நகர் என்றும் உஸ்மானாபாத் பெயர் தாராஷிவ் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் அதிகம் வசித்து வரும் அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் ஆகிய இரு நகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று சிவசேனா மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், உத்தவ்தாக்கரே முதல்வராக இருந்தபோது அவ்விரு நகரங்களின்பெயர்களை மாற்றும் முடிவுகடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதிஎடுக்கப்பட்டது.