State

போதை பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை பார்த்தால் கண்ணீர் வருகிறது: நிர்மலா சீதாராமன் வேதனை | drugs issue in state of Tamil Nadu brings tears Nirmala Sitharaman

போதை பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை பார்த்தால் கண்ணீர் வருகிறது: நிர்மலா சீதாராமன் வேதனை | drugs issue in state of Tamil Nadu brings tears Nirmala Sitharaman
போதை பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை பார்த்தால் கண்ணீர் வருகிறது: நிர்மலா சீதாராமன் வேதனை | drugs issue in state of Tamil Nadu brings tears Nirmala Sitharaman


பல்லாவரம்: போதை பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலையைப் பார்த்தால் கண்ணீர் வருகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை தெரிவித்தார்.

பல்லாவரம் தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒரு நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயத்தை தேர்தலுக்காகத்தான் பேசவேண்டும் என்பதில்லை. அதுகுறித்து எப்போது வேண்டுமானாலும் பேசலாம். அது நமது உரிமை. கச்சத்தீவு தொடர்பாக 50 ஆண்டுகளாக உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

கச்சத்தீவு நமது மீனவர்கள் வாழ்க்கையின் ஓர் அங்கம். மேலும், நமது பொருளாதார மண்டலத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அப்படி இருக்கும்போது கச்சத்தீவைப் பற்றி பேசக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும்?

அப்போதும், இப்போதும் திமுக – காங்கிரஸ் கூட்டணியாக உள்ளனர். காங்கிரஸ் ஒரு தேசிய கட்சியாக இருந்துகொண்டு அதற்கு விளக்கம் கொடுக்காமல், பேசக்கூடாது என்று சொல்கிறது. நேரு கச்சத்தீவை ஒரு தொல்லை என்றும், இந்திரா காந்தி கச்சத்தீவை ஒரு சிறிய பாறை என்றும் தெரிவித்துள்ளனர்.

உண்மை தெரிய வேண்டும்: 1974-ல் வெளியுறவு செயலாளர் விரிவாக எடுத்துக் கூறியும், இதற்கெல்லாம் அப்போதைய முதல்வர்கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், திமுக கூட்டணிக் கட்சியினர் பொய் பிரச்சாரம் மட்டும் செய்கின்றனர். இதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்றேஉண்மை தகவலை வெளியிட்டோம். தேர்தலுக்காக மட்டும் அல்ல. தேர்தல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சொல்ல வேண்டிய விஷயம் இது. தமிழக மக்களுக்கு கச்சத்தீவு குறித்த உண்மை தெரிய வேண்டும்.

தமிழக மக்களுக்கு விரோதமான செயல்களை காங்கிரஸ் கட்சிசெய்யும்போது திமுக அமைதி காத்தது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தடை விதித்தபோதும் காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி. இப்படியாக தமிழக மக்களுக்கு விரோதமான செயல்களை காங்கிரஸ் செய்தபோது, திமுக எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்துள்ளது. ஒரு போராட்டமும் நடத்தியதில்லை. கூட்டணி கட்சி ஆட்சியில் இருந்த போதெல்லாம் விட்டுவிட்டு தற்போது பிரதமர் மோடிக்கு திமுக 21 முறை கடிதம் எழுதுகிறது.

இந்த விவகாரத்தில் 10 ஆண்டுகளாக மத்திய அரசு என்ன செய்தது என கேட்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பாக இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தால்தானே இதைப்பற்றி பேச முடியும்.

எங்கள் கட்சி எப்போது தீர்மானிக்கிறதோ அப்போது நான் தேர்தலில் போட்டியிடுவேன். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பணம் வருகிறது. ஏன், திமுகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணம் வரவில்லையா? அதுவும் ஒரே நபரிடம் இருந்து அவ்வளவு பணம் கிடைக்க, அவர்களுக்குள் என்ன கொடுக்கல் வாங்கல்?

5 ஆயிரம் கோடி சிறப்பு நிதி: சென்னைக்கு ரூ.5,000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கியிருந்தோம். வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழகத்துக்கு ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை தமிழக அரசு என்ன செய்தது? ஏற்கெனவே வழங்கிய நிதிக்கு தமிழகஅரசு கணக்கு கூறவேண்டும். ரூ.5,000 கோடியை முறையாக செலவிட்டிருந்தால் ‘மிக்ஜாம்’ புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது.

போதை பொருள் விவகாரம்: ரூ.5,000 கோடியை 90 சதவீதம் செலவழித்து மழைநீர் வடிகால் பணிகளை செய்ததாகக் கூறினர். ஆனால் பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்புக்கு பின் 90 சதவீதம் பணிகள் முடியவில்லை என்றனர். மோடி அரசிடம் இருந்து நிவாரண நிதி வரவில்லை என்று சொல்கின்றனர். உண்மையை பேசுங்கள். நிவாரண நிதி உயர்மட்ட ஆலோசனை முடிந்த பிறகு வரத்தான் போகிறது.

போதை பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலையைப் பார்த்தால் கண்ணீர் வருகிறது. குஜராத்தில் மட்டும் போதை பொருள் கைப்பற்றப்படுகிறதா? தமிழகத்தின் ராமேசுவரத்தில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை என்ன சொல்வது? இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *