National

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமானது உத்தராகண்ட்!

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமானது உத்தராகண்ட்!
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமானது உத்தராகண்ட்!


பொது சிவில் சட்டம் - உத்தராகண்ட்

பொது சிவில் சட்டம் – உத்தராகண்ட் முகநூல்

அரசியல் சாசன புத்தகத்தினை கையில் ஏந்தியபடி உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு இன்று சென்ற அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்தினை அறிமுகம் செய்தார்.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் பொது சிவில் சட்டத்தினை ஏற்கும் முதல் மாநிலமாக உத்தராகண்ட் மாறும். உத்தராகண்ட்டை தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை பொறுத்துவரை பொது சிவில் சட்டத்திற்கு பல காலமாக எதிர்ப்பு கிளம்பிவரும் நிலையில் இதற்கு ஆதரவு தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்தும் முதல் மாநிலமாக உத்தராகண்ட் செயல்பட்டு வருகிறது. முன்னாதாக நேற்றைய தினம் UCC-க்கு உத்தராகண்ட் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் அதுவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம்:

பாஜகவை பொருத்தவரை பொது சிவில் சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக அதனை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக சேர்த்துள்ளனர். சரி பொது சிவில் சட்டம் என்பது என்ன?

இந்தியாவை பொறுத்தவரை கிரிமினல் சட்டம் என்பது பொதுவானது. அதன்படி கொலை, கொள்ளை போன்ற குற்றவியல் தொடர்பான சட்டங்கள் அனைத்தும் பொதுவானவையே. இருப்பினும் அக்கிரிமினல் சட்டத்திலுள்ள உரிமையியல் சார்ந்த சட்டங்களான சிவில் சட்டங்கள் அதாவது குழந்தை தத்தெடுப்பு, திருமணம், விவாகரத்து போன்றவை மட்டும் தனிநபர் மற்றும் மதநம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும்.

இந்த பொது சிவில் சட்டம் என்பது சிவில் சட்டத்தினையும் அனைவருக்கும் பொதுவான சட்டமாக மாற்ற வேண்டும் எனக்குறிக்கிறது. அதாவது, பொது சிவில் சட்டம் என்பது, மதத்தின் அடிப்படையில் இல்லாமல் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரேமாதிரியான பொதுவான சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது ஆகும்.

கேரளா, மிசோரம் போன்ற மாநிலங்கள் இதற்கு எதிராக தீர்மானத்தினை இயற்றியுள்ளனர் என்பதும் கூறிப்பிடத்தக்கது.



Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *