சென்னை: ‘தமிழ்க்குடிமகன்’ படத்தில் பெரியார் குறித்து இடம்பெற்ற வசனம் சர்ச்சையான நிலையில் அது குறித்து நடிகர் சேரன் விளக்கமளித்துள்ளார்.
‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கி தயாரித்துள்ள படம், ‘தமிழ்க்குடிமகன்’. இதில் சேரன் நாயகனாக நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசை மைத்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீபிரியங்கா, துருவா, வேல ராமமூர்த்தி, லால், அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அண்மையில் வெளியானது.
இப்படத்தில் நீதிமன்றக் காட்சி ஒன்றில் பெரியார் குறித்து சேரன் பேசும் வசனம் ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. பலரும் அந்த காட்சியை பகிர்ந்து சேரனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “பெரியார் போன்ற ஒப்பற்ற தலைவர்கள் செய்ததன் நோக்கத்தை நீங்கள் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது” என்று விமர்சித்திருந்த ஒருவரின் எக்ஸ் தள பதிவை ரீபோஸ்ட் செய்துள்ள சேரன், இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
தனது பதிவில் சேரன் கூறியிருப்பதாவது: “அது என் கருத்தல்ல தம்பி.. இயக்குனரின் கருத்து. அவர் பேச சொன்னதை நான் நடிக்க வேண்டும். அவ்வளவே. பெரியாரை பற்றிய என் கருத்துக்கள் தெரியவேண்டுமெனில் எனது சமீபத்திய நேர்காணல் பாருங்கள். குறை கூறி காழ்ப்புணர்வில் வன்மம் உமிழ்பவர்களுக்கு என் பதில் வராது.சரியாக புரியப்படுவது நன்று” இவ்வாறு சேரன் தனது பதிவில் கூறியுள்ளார்.
அது என் கருத்தல்ல தம்பி.. இயக்குனரின் கருத்து. அவர் பேச சொன்னதை நான் நடிக்க வேண்டும். அவ்வளவே. பெரியாரை பற்றிய என் கருத்துக்கள் தெரியவேண்டுமெனில் எனது சமீபத்திய நேர்காணல் பாருங்கள்.
குறை கூறி காழ்ப்புணர்வில் வன்மம் உமிழ்பவர்களுக்கு என் பதில் வராது..
சரியாக புரியப்படுவது நன்று. https://t.co/gK3xec0qmx
— Cheran (@directorcheran) September 9, 2023