ஹைதராபாத்: நடிகை அனுஷ்கா ஷெட்டி 3 வருட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள படம், ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. நவீன் பொலிஷெட்டி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை மகேஷ்பாபு இயக்கியுள்ளார்.
கடந்த 7ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழிலும் ரிலீஸ் ஆனது. வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தை பெண்களுக்கு மட்டும் சிறப்புக் காட்சியாக வெளியிடுகின்றனர். அதன்படி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 20 திரையரங்கில் இன்று காலை காட்சி பெண்களுக்கு மட்டும் திரையிடப்படுகிறது. தியேட்டர் பற்றிய விவரங்களுடன் இதை நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்