State

புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை | 9 Pudukottai Fishermen Arrested by Sri Lankan Navy

புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை | 9 Pudukottai Fishermen Arrested by Sri Lankan Navy


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை இன்று (செப்.14) அதிகாலை சிறை பிடித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப் படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 163 விசைப் படகுகள் மூலமும் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 78 விசைப் படகுகள் மூலமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது, 32 நாட்டிக்கல் தொலைவில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த செந்திலுக்கு சொந்தமான விசைப் படகில் என்.அருண் (36), ஜி.மருது (42), கே.சுந்தரம் (35), எஸ்.செல்வராஜ் (38) ஆகிய 4 மீனவர்களும், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான விசைப் படகில் ஆர்.கேசவன் (32), ஆர்.குமார் (38), கே.முத்து (43), ஆர்.குணா (20), முருகேசன் (45) ஆகிய 5 மீனவர்களும் மீன்பிடித்துள்ளனர்.

அப்போது, அங்கு ரோந்து கப்பலில் சென்ற இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 9 மீனவர்களையும், அவர்களது 2 படகுகளையும் நேற்று அதிகாலை சிறை பிடித்து, காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அவர்களது குடும்பத்தினரையும், சக மீனவர்களையும் கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.





Source link

About Author

tamilnewspapper.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: